இன்று தமிழ் சினிமாவில் 100 கோடி வரை சம்பளம் பெரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் சிறு வயதில், சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் தான் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார். தற்போது அந்த வீட்டில் விஜய் மற்றும் அவரது பெற்றோர் வசிக்கவில்லை என்றாலும், சாலிகிராமத்தில் உள்ள வீட்டை, தன்னுடைய அலுவலகமாக மாற்றி வைத்துள்ளார் எஸ்.ஏ.சி. இந்நிலையில் திடீர் என இவரது அலுவலகத்தில் உள்ள பொருட்களை நீதிமன்றம் ஜப்தி செய்ய உத்தரவிட்டது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இயக்குனரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் கடந்த 2011 ஆம், சத்யராஜ், விக்ராந்த், பானு, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ’சட்டப்படி குற்றம்’. இந்த படத்தை விளம்பரம் செய்வதற்காக சரவணன் என்பவருடன் எஸ்.ஏ.சி ஒப்பந்தம் செய்த நிலையில், ஒப்பந்தப்படி விளம்பரத்திற்கான பணத்தை சரவணன் பலமுறை எஸ்.ஏ.சி-யிடம் கேட்டும் வர தரவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இது குறித்து சரவணன் தனக்கான பணத்தை பெற்று தரவேண்டும் என கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
மேலும் செய்திகள்: தளபதி 67 அப்டேட்டோட தான் திரும்பி வருவேன் - ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸ்
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பணத்தை உடனே செலுத்த உத்தரவிட்டது. இருப்பினும் எஸ்.ஏ.சி பணத்தை கொடுக்காததால், தற்போது சாலிகிராமத்தில் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய எழும்பூர் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.