ஆடியோ வெளியீட்டுடன் படப்பிடிப்பை முடிக்கும் விருமன்..எங்கு தெரியுமா?

First Published | Aug 1, 2022, 9:35 PM IST

முன்னதாக மதுரையில் விருமன் ஆடியோ லான்ச் நடத்தப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது இது சென்னையில் தான் நடைபெற உள்ளது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

viruman

கார்த்தி தற்போது நடித்து முடித்துள்ள விருமன் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை நாயகனின் முந்தைய படமான கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கியுள்ளார். சூர்யாவின் 2 டி  தயாரித்துள்ளது. இதில் நாயகியாக பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி அறிமுகமாகிறார். வரும் 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளவிருமனுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

viruman

இந்த படத்தின் பாடல்கள் வரும் மூன்றாம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அந்த விழாவில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்திவுடன் இயக்குனர் சங்கரும் கலந்து கொள்வார் என தெரிகிறது. அதேபோல பாடல் வெளியீட்டை சேர்த்து படத்தின் டிரைலரையும் படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...பொன்னியின் செல்வன் முதல் பாடலுக்கே இவ்வளவு வரவேற்பா?

Tap to resize

viruman

 கொம்பன் திரைப்படம் போல உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விருமன் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரன், சரண்யா பொன்வண்ணன், சூரி, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்திற்கான ஒளிப்பதிவை செல்வகுமார் மேற்கொள்ள படத்தொகுப்பை வெங்கட்ராஜன் செய்துள்ளார். முன்னதாக இந்த படம் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு...என்ஜாய் எஞ்சாமி அறிவின் குற்றச்சாட்டிற்கு விளக்கமளித்த சந்தோஷ் நாராயணன்!

பின்னர் திடீரென வெளியீட்டு தேதி மாற்றி வைக்கப்பட்டு முன்கூட்டியே 12ஆம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தில் இருந்து முன்னதாக வெளியான கஞ்சா பூ கண்ணாலே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருந்தார். இந்நிலையில் படத்தின் புதிய தகவலாக ஆடியோ லான்ச்  உடன் படத்தின் சில காட்சிகளையும் படமாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

viruman

மேலும் செய்திகளுக்கு...சமீபத்தில் ரிலீஸான யானை..தணிக்கையை மாற்றியமைக்க மேல் முறையீடு

முன்னதாக மதுரையில் ஆடியோ லான்ச் நடத்தப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது இது சென்னையில் தான் நடைபெற உள்ளது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதோடு இந்த படத்திற்காக திருவிழா போன்ற செட் அமைக்கப்பட்டு ஒரு நாள் மட்டும் சூட்டிங் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Latest Videos

click me!