ரூ.15 கோடியில் உருவான இந்த படம் ரூ. 50. 5 கோடிகளை கோடியை வசூலாக பெற்றது. ஜாதிய உணர்வை மையமாகக் கொண்டு உருவாகி இந்த படம் குறித்த சர்ச்சை ஒரு மாதம் கழித்து தற்போது உருவாகியுள்ளது. இந்த படம் குறித்து மீனவர் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஜோபாய் கோமஸ் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கில், யானை திரைப்படத்தில் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்களை சமூக விரோதிகளாக காட்டியுள்ளதாகவும், மீனவர்களை கூலிப்படையினராகவும், குழந்தைகளை தவறாக பயன்படுத்துவராகம் சித்தரிப்பதாக கூறப்பட்டுள்ளது. சில காட்சிகளில் மத உணர்வை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு... தி லெஜண்ட் 4வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முதல் படத்திலேயே மாஸ் காட்டிய சரவணன் அருள்
இதை விசாரித்த உயர்நீதிமன்றம் தணிக்கை குழுவின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தீர்களா? என மனுதாரர் தரப்பிற்கு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் குழுவில் மேல்முறையீடு செய்ய மனுதாரரை வலியுறுத்தி இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது.