பின்னர் எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி என தொடர்ந்து தன் தம்பியை வைத்து படமியாக்கிய இவர் விஜயின் வேலாயுதம் உள்ளிட்ட படங்களையும் இயக்கி இருந்தார். இதில் பெரும்பாலான படங்கள் பிற மொழி படங்களின் ரீமேக் ஆகவே உருவாகியிருந்தது.
மேலும் செய்திகளுக்கு....அஜித் இயக்குனருடன் விஜய் சேதுபதி...என்ன கதை தெரியுமா?
இதையடுத்து 2015ஆம் ஆண்டு இவரது சொந்த நடையில் தனி ஒருவன் படத்தை உருவாக்கினார். இந்த படத்தில் ஜெயம் ரவி தான் நாயகனாக நடித்திருந்தார். அதோடு அரவிந்த்சாமி எதிர் நாயகனாக தோன்றி மாஸ் காட்டினார். பல வெற்றிகளை கொண்டாடிய இந்த படம் மூலம் மோகன் ராஜாவிற்கு பல விருதுகளும் பாராட்டுகளும் குவிந்தன. இதன் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.