நடிகர் சிம்பு 'பத்து தல' படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டதாக கூறி, தற்போது படு மாஸான இரண்டு புகைப்படங்களை வெளியிட அது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
'மாநாடு' படத்தின் வெற்றிக்கு பின்னர் கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தி வரும் சிம்புவின் கைவசம் தற்போது 'வெந்து தணிந்தது காடு' மற்றும் 'பத்து தல' ஆகிய இரண்டு படங்கள் உள்ளது. இவர் கேமியோ ரோலில் நடித்த 'மஹா' திரைப்படம் படு தோல்வியை தழுவியது.
26
சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முற்றிலும் முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதை தொடர்ந்து ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் பங்கேற்க உள்ளதாக, தன்னுடைய சமூக வலைதளத்தின் மூலம் உறுதி செய்துள்ளார் சிம்பு.
மேலும் செய்திகள்: பிகினி எல்லை தாண்டிய கவர்ச்சி... மாலத்தீவில் மஜாவாக போஸ் கொடுத்து இளம் நெஞ்சங்களை ஏங்க விடும் வேதிகா!
36
'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், திடீர் என சிம்புவின் தந்தை டி .ராஜேந்தருக்கு உடல்நலம் குன்றியதால், சிம்பு மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவிற்கு அவரை கொண்டு சென்று சிகிச்சை அளித்ததால், இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தாமதமானது.
46
இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து திரும்பிய சிம்பு மீண்டும் ’பத்து தல’ படப்பிடிப்பில் இன்று முதல் கலந்து கொண்டுள்ளார். இதனை சற்று முன்னர் இரண்டு மாஸ் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
இந்த இரு புகைப்படங்களில்... ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போய், தாடி... மீசையுடன் படு ஜோராக இருக்கிறார். இந்த வித்தியாசமான மிரட்டல் கெட்டப்பில் சிம்பு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வேற லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
66
சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன், மனுஷ்யபுத்திரன் உட்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை 'சில்லுனு ஒரு காதல்' படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.