அஜித் இயக்குனருடன் விஜய் சேதுபதி...என்ன கதை தெரியுமா?

First Published | Aug 1, 2022, 5:36 PM IST

வினோத்துடன் கைகோர்த்துள்ள மக்கள் செல்வன் இயக்குனரின் ஸ்கிரிப்ட்டை கேட்டவுடன் பிடித்து விட சம்மதம் தெரிவித்துள்ளாராம்.  இந்த புதிய திட்டம் இரண்டு பாகங்களாக உருவாகலாம் என்றும் கூறப்படுகிறது.

h vinoth

நேர்கொண்ட பார்வை வலிமை தற்போது ஏகே 61 ஆகிய அஜித் படங்களை இயக்கியதன் மூலம் அறியப்பட்டவர். இவர் முன்னதாக சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்கள் வரவேற்பை பெற்றது. இவரின்  முந்தைய படைப்புகளான  நேர்கொண்ட பார்வை, வலிமை என இரு படங்களும் கலவை ஆன விமர்சனங்களை பெற்றது. இதனால் அஜித் 61வது படத்தை மிக நுணுக்கமாக இவர் செதுக்கு வருவதாக கூறப்படுகிறது.

தி லெஜண்ட் 4வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முதல் படத்திலேயே மாஸ் காட்டிய சரவணன் அருள்

வங்கி கொள்ளை சம்மந்தமான கதைக்களத்தை கொண்ட இந்த படம் ஹைதராபாத் சென்னையை தொடர்ந்து தற்போது வெளிநாடு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாகவும், ஜிப்ரான் இசையமைப்பாளராகவும் ஒப்பந்தமாகியுள்ளார்.. அஜித் இரு தோற்றங்களில் நடிக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

h vinoth

இதற்கிடையே எச். வினோத் விஜய் சேதுபதியை வைத்து புதிய திட்டம் ஒன்றை தீட்டி உள்ளாராம். இந்த படம் திகில் திரில்லராக இருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக விக்ரம் வேதா, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக தோன்றியதை அடுத்து மவுசு கூடிவிட்டது. அதோடு வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதிக்கு தான் வரவேற்பும் அதிகமாக இருக்கிறது. தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் எதிர் நாயகனாக கமிட் ஆகி வருகிறார் மக்கள் செல்வன்.

மேலும் செய்திகளுக்கு...சர்ச்சைக்கு உள்ளான மஹா.. இரண்டே வாரத்தில் ஓடிடி -க்கு வரும் ஹன்சிகாவின் படம்

Tap to resize

h vinoth vijaysethupathy

மேலும் கடைசி விவசாயி, சூரி நாயகனாக அறிமுகமாகும் விடுதலை உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்திலும் தோன்றியுள்ள விஜய் சேதுபதி தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை மிஸ் செய்யாமல் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு...ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் புறக்கணிக்க பட்ட தெருக்குரல் அறிவு! குமுறல் பதிவால் மீண்டும் வெடித்த சர்ச்சை!

இந்நிலையில் வினோத்துடன் கைகோர்த்துள்ள மக்கள் செல்வன் இயக்குனரின் ஸ்கிரிப்ட்டை கேட்டவுடன் பிடித்து விட சம்மதம் தெரிவித்துள்ளாராம்.  இந்த புதிய திட்டம் இரண்டு பாகங்களாக உருவாகலாம் என்றும் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகத இந்த படத்தின் நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vijaysethupathy

சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருந்த மாமனிதன் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்தை சீனு ராமசாமி பல ஆண்டுகளாக இயக்கி வருகிறார். இதையடுத்து 19(1)அ என்னும் மலையாள படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் பாலிவுட்டில் மேரி கிறிஸ்மஸ் படத்தில் நாயகனாக தோன்றியுள்ளார் இந்த படத்தில் கத்ரீனா கைஃப் நாயகியாக உள்ளார். அதோட சூரியின் விடுதலை, காந்தி பேசுகிறார், பாலிவுட்டில் மற்றொரு படமாக மும்பைகார் உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் விஜய் சேதுபதி.

Latest Videos

click me!