விளம்பர படங்களில் யங் ஹீரோவை போல் ஆட்டம்... பாட்டத்துடன் தோன்றி, பிரமிக்க வைத்தவர் பிரபல தொழிலதிபர் சரவணன் அருள். இவர் விளம்பரத்தில் நடித்ததற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் சினிமாவில் அறிமுகமாக முடிவெடுத்தார்.
5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவான இந்த படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலே நடித்திருந்தார். ஜூலை 28-ந் தேதி உலகம் முழுவதும், 2500 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
அதே போல் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலேவுக்கு சம்பளமாக 20 கோடி வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது. எனவே அதிக பட்சமாக தென்னிந்திய திரையுலகில் நடிகை நயன்தாரா 10 கோடி வரை சம்பளமாக பெற்று வரும் நிலையில், அவரை மிஞ்சும் விதத்தில் இரண்டு மடங்கு ஊர்வசி சம்பளம் வாங்கினார் என்றும் தகவல்கள் பரவியது.
இந்நிலையில் ஊர்வசி ரவுத்தலே தரப்பினர் இப்படி பரவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி என்றும், 20 கோடி சம்பளம் வாங்க வில்லை, 10 கோடிக்கும் குறைவான கணிசமான தொகையை ஊர்வசி ரவுத்தலே சம்பளமாக பெற்றதாக கூறப்பட்டுள்ளது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதால், மீண்டும் நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்கிற முதல் இடத்தை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.