உதயநிதியால் மீண்டும் உயிர்பெறும் விக்ரமின் துருவ நட்சத்திரம்..! மாஸான போட்டோவுடன் கவுதம் மேனன் கொடுத்த அப்டேட்

First Published | Aug 2, 2022, 10:30 AM IST

Dhruva Natchathiram : கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் படத்தின் முக்கிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் ஸ்டைலிஷ் இயக்குனராக வலம் வருபவர் கவுதம் மேனன். இவர் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் தான் துருவ நட்சத்திரம். இப்படத்தின் மூலம் முதன்முறையாக விக்ரம் உடன் கூட்டணி அமைத்தார் கவுதம். இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆறு மாதங்களில் பெரும்பாலான படப்பிடிப்பை முடித்துவிட்டனர்.

இதையடுத்து ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு முடங்கிய இப்படம் அதன்பின் தொடங்கப்படவில்லை. இப்படத்தில் விக்ரம் உடன் ரீத்து வர்மா, ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி, ஐஸ்வர்யா ராஜேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இதையும் படியுங்கள்... பிகினி எல்லை தாண்டிய கவர்ச்சி... மாலத்தீவில் மஜாவாக போஸ் கொடுத்து இளம் நெஞ்சங்களை ஏங்க விடும் வேதிகா!

Tap to resize

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த இப்படம் தற்போது உயிர்பெற்றுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்க இயக்குனர் கவுதம் மேனன் தயாராகி உள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் விக்ரம் உடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு வாரமே எஞ்சி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் துருவ நட்சத்திரம் திரைப்படம் மீண்டும் தொடங்கப்படுவதற்கு நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தான் காரணம் என கூறப்படுகிறது. அவரின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை கைப்பற்றி உள்ளதாகவும், அதனால் தான் விரைவில் ஷூட்டிங் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதையும், படியுங்கள்... முதல் முறையாக குழந்தையின் கியூட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை பிரணீதா! அம்மாவை போல் கொள்ளை அழகு!

Latest Videos

click me!