படுக்கைக்கு வர மறுத்ததால் பெரிய ஹீரோக்கள் பட வாய்ப்பு தரல... சிம்பு பட நடிகை வெளியிட்ட திடுக் தகவல்

Published : Aug 02, 2022, 02:31 PM IST

Mallika Sherawat : முன்னணி நடிகர்களின் ஆசைக்கு இணங்க மறுத்ததால் அவர்கள் தனக்கு பட வாய்ப்பு தரவில்லை என சிம்பு பட நடிகை கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
14
படுக்கைக்கு வர மறுத்ததால் பெரிய ஹீரோக்கள் பட வாய்ப்பு தரல... சிம்பு பட நடிகை வெளியிட்ட திடுக் தகவல்

பாலிவுட் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் மல்லிகா ஷெராவத். இவர் தமிழிலும் கமல்ஹாசனின் தசாவதாரம் படம் மூலம் நடிகையாக எண்ட்ரி கொடுத்தார். அப்படத்தில் வில்லியாக நடித்திருந்த இவர், அதன்பின் கடந்த 2011-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் கலாசலா என்கிற பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி இருந்தார்.

24

இதுதவிர ஜாக்கிச்சான் உடன் தி மித் என்கிற படத்திலும் நடித்திருந்தார். இப்படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்து அதிர்ச்சி கொடுத்தார் மல்லிகா. இவ்வாறு பரபரப்புக்கு பஞ்சமில்லாத நடிகையாக வலம் வரும் மல்லிகா ஷெராவத், தற்போது தனக்கு முன்னணி நடிகர்கள் பட வாய்ப்பு வழங்க மறுத்ததற்காக பகீர் காரணம் ஒன்றை கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்.. நிச்சயதார்த்தம் முடிஞ்சி 3 வருஷம் ஆகியும் விஜயகாந்த் மகனுக்கு திருமணமாகாதது ஏன்?... மணப்பெண் யார் தெரியுமா?

34

பாலிவுட்டில் அவர் நடிப்பில் தற்போது ஆர்.கே/ஆர்.கே என்கிற திரைப்படம் தற்போது உருவாகி உள்ளது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய மல்லிகா ஷெராவத், தான் முன்னணி நடிகர்களின் ஆசைக்கு இணங்க மறுத்ததால் அவர்கள் தனக்கு பட வாய்ப்பு தரவில்லை என கூறியுள்ளார். மேலும் அவர்களை பொறுத்தவரை நடிகைகள் என்றால் உட்காரு, எழு என்று எது சொன்னாலும் செய்யவேண்டும். என்னால் அப்படி இருக்க முடியாது.

44

இவ்வளவு ஏன், நள்ளிரவு 3 மணிக்கு போன் செய்து வீட்டுக்கு வா என முன்னணி நடிகர்கள் அழைத்தால் செல்ல வேண்டும். அதற்கு மறுப்பு தெரிவிப்பவர்களை அப்படத்தில் இருந்தே தூக்கி எறிந்துவிடுவார்கள். அப்படித் தான் நடந்துகொண்டிருக்கிறது. அவற்றையெல்லாம் செய்ய மறுத்ததால் தான் பெரிய ஹீரோக்கள் எனக்கு வாய்ப்பு தரவில்லை என மல்லிகா ஷெராவத் கூறி உள்ளார். அவரின் இந்த பேச்சு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்.. தமிழ் சினிமாவில் இந்த வாரம் மட்டும் 10 படங்கள் ரிலீசாகப்போகுது... அது என்னென்ன படங்கள் தெரியுமா? - முழு விவரம்

Read more Photos on
click me!

Recommended Stories