சமீபத்தில் காஷ்மீர் பைல்ஸில் குறித்து பேசிய சாய் பல்லவி, அதில் பண்டிட்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை காட்டினார்கள். மத மோதல் என்று நீங்கள் எடுத்துக் கொண்டால், சமீபத்தில், ஒரு முஸ்லீம் மனிதர் மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். சிலர் அவரை தடுத்து நிறுத்தி ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கங்களை எழுப்பும்படி வற்புறுத்தினர். அதனால் அன்று நடந்தது, இப்போது நடந்தது என்று எந்த வித்தியாசத்தையும் பார்க்க முடியாது” என கூறி சர்ச்சையில் சிக்கி கொண்டார்.