aishwarya rajesh
ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தீயவர் குழைகள் நடுங்க, புளிமடா, தி கிரேட் இந்தியன் கிச்சன், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களை தன கைவசம் வைத்துள்ளார். இதில் தி கிரேட் இந்தியன் கிச்சன் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இதன் தமிழ் பதிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.
Aishwarya Rajesh
வத்திக்குச்சி இயக்குனர் பி கின்ஸ்லினின் அடுத்த படமான டிரைவர் ஜமுனாவுக்கு ஐஸ்வர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.இதில் ஆடுகளம் நரேன், ஸ்ரீ ரஞ்சனி, அபிஷேக், ராஜேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
Aishwarya Rajesh
SIIMA விருதுகள் , ஒரு பிலிம்பேர் விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது என பல பாராட்டுகளை பெற்றுள்ள இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராக பின்னர் மானாட மயிலாட ரியாலிட்டி ஷோவில் டென்ஸராக ஜெயித்த பிறகு அவர்களும் இவர்களும் படத்த்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் அட்டகத்தி அமுதாவாக வெற்றி பெற்றார்.
மேலும் செய்திகளுக்கு...திருமணத்திற்கு தயாராகும் ஹரீஷ் கல்யாண்.. எப்ப கல்யாணம் தெரியுமா?
Aishwarya Rajesh
நாயகியாவதற்கு நிறம் ஒரு தடையில்லை என நிரூபித்த ஐஸ்வர்யா ராஜேஷ் ரசிகருக்கு அளித்த பதில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் தனது பேன்களுடன் இன்ஸ்ட்டா லைவில் உரையாடிய ஐஸ்வர்யா ராஜேஸுடன் கலந்துரையாடிய ரசிகர் ஒருவர் நீங்க கிளாமரா நடிக்காதிங்க செட்டாகல என கூறுகிறார். அதற்கு ம்ம்ம்..சரி என கூலாக பதிலத்துள்ளார் நாயகி.