விக்ரம் லைஃப் டைம் வசூல் எவ்வளவு தெரியுமா?..20 வது மிகப்பெரிய இந்திய திரைப்படம் இது தானாம்?

Published : Jul 02, 2022, 04:05 PM IST

விக்ரம் வாழ்நாள் வசூல் ரூ.410 கோடியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதோடு அதிக வசூல் செய்த இந்திய படங்களின் பட்டியலில் வரும் நாட்களில் 20வது இடத்தை பிடிக்கும் என கணிப்பு சொல்கிறது.

PREV
16
விக்ரம் லைஃப் டைம் வசூல் எவ்வளவு தெரியுமா?..20 வது மிகப்பெரிய இந்திய திரைப்படம் இது தானாம்?
Pathala Pathala Video song from vikram

அரசியல் தலைவர், பிக் பாஸ் தொகுப்பாளர் என பிஸியாக இருந்த கமலின் நீண்ட நாள் செட்யூலில் இருந்த படம் விக்ரம். இறுதியாக விஸ்வரூபம் 2 வுக்கு பிறகு உலகநாயகனின் படம் எதுவும் தயாராகவில்லை. இதற்கிடையே காலில் ஆப்ரேசன் மாநில தேர்தல், கொரோனா என பல இன்னல்கள் வந்து இன்னல்களை ஏற்படுத்த விக்ரம் படப்பிடிப்பு பல தாமதங்களை சந்தித்தது.

26
vikram team

ஒருவழியாக படப்பிடிப்பை முடித்துக்கொடுக்க முடிவெடுத்த கமல் தான் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் அல்டிமேட் ஷோவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து சிம்பு ஏங்கராக பொறுப்பேற்றார். பின்னர் முழுவீச்சில் நடைபெற்ற விக்ரம் படப்பிடிப்பு இறுதி வேலைகளை முடித்துக்கொண்டு பர்ஸ்ட் சிங்குளை வெளியிட்டது.

மேலும் செய்திகளுக்கு..திருமணத்திற்கு தயாராகும் ஹரீஷ் கல்யாண்.. எப்ப கல்யாணம் தெரியுமா?

36
vikram update

பத்தல பத்தல என துவங்கும் பாடலில் கமல் எழுதிய வரிகளை பல சர்ச்சைகளை உருவாக்கி படத்திற்கு நல்ல ப்ரோமோஷனாக அமைந்தது. அதோடு வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ரெட்ஜெயண்ட் தேனாக ராசியில்வேயின் உதவியுடன் ரயில் பெட்டிகளில் விக்ரம் படத்தின் போஸ்டரை வரைந்து ப்ரொமோட் செய்தது. துப்பாக்கியுடன் கமலின் போஸ்டர் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்தது.

மேலும் செய்திகளுக்கு..3டி தொழில்நுட்பத்தில் சியான் படம் ! ரஞ்சித் - விக்ரம் கூட்டணியின் சூப்பர் அப்டேட் இதோ!

46
vikram rolex

பகத் பாசில், விஜய் சேதுபதி இருவரின் ரோல்கள் குறித்த தகவல்கள் கசிந்த வந்த நிலையில் புதிய திருப்பமாக சூர்யா கம்போ மேலும் ஆர்வத்தை தூண்டியது. கடந்த மாதம் 3-ம் தேதி வெளியான இந்த படம் பலத்தை வரவேற்பை பெற்றதுடன் குறுகிய காலத்தில் ரூ.300 கோடி வசூலை எட்டி ஆச்சர்யத்தை கொணர்ந்தது. 

மேலும் செய்திகளுக்கு..பட வாய்ப்புகள் குறைந்ததால்...மீண்டும் அண்ணனுடன் 2-ம் பாகத்தில் இணைய திட்டமிட்ட ஜெயம் ரவி!

56
vikram movie

இந்நிலையில் இந்த படத்தின் புதிய தகவலாக விக்ரம் வாழ்நாள் வசூல் ரூ.410 கோடியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதோடு அதிக வசூல் செய்த இந்திய படங்களின் பட்டியலில் வரும் நாட்களில் 20வது இடத்தை பிடிக்கும் என கணிப்பு சொல்கிறது.

66
vikram

முன்னதாக அதிக வசூல் செய்த படங்களில்ன் பட்டியல் இதோ ...

1. தங்கல் 2,024 கோடி ,
2.பாகுபலி 2  ரூ.1,810 கோடி
3. KGF: அத்தியாயம் 2 ரூ.1,233 கோடி
4.RRR ரூ. 1,150 கோடி 
5. பஜ்ரங்கி பைஜான்ரூ. 969.06 கோடி 
6. சீக்ரெட் சூப்பர் ஸ்டார் ரூ.966.86 கோடி
7. பி.கே    ரூ. 854 கோடி 
8. 2.0    ரூ.655.
9.பாகுபலி ரூ.650 கோடி
10. சுல்தான்    ரூ.623.33 கோடி 
11. சஞ்சுரூ.586.85 கோடி
12. பத்மாவத்ரூ.585 கோடி
13. டைகர் ஜிந்தா ஹை    ரூ. 565 கோடி 
14. தூம் 3    ரூ. 556 கோடி
15. வார் ரூ. 475.5 கோடி 
16.    3 இடியட்ஸ் ரூ.460 கோடி 
17. அந்தாதுன்    ரூ.456.89 கோடி
18.சாஹோ ரூ. 433.06 கோடி 
19. பிரேம் ரத்தன் தன் பாயோ    ரூ.432  கோடி 
20. சென்னை எக்ஸ்பிரஸ் ரூ. 423  கோடி 
21. விக்ரம் ரூ. 409 கோடி 

Read more Photos on
click me!

Recommended Stories