பிக்பாஸிற்கு முன்னரே தமிழ் ரசிங்கர்களுக்கு அறிமுகமானவர் ஹரீஷ் கல்யாண். இவரது முதல் படம் சிந்து சமவெளி. சாமி எழுதி இயக்கிய இந்த படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது இதில் ஹரிஷ் கல்யாண் உடன் அமலா பால், கஜினி ஆகியோர் நடித்துள்ளனர். இதில் சுந்தர் சி பாபு இசையமைத்துள்ளார்.
25
Harish Kalyan
அரிது அரிது,சட்டப்படி குற்றம், சந்தமாமா உள்ளிட்ட தமிழ் படங்களை தொடர்ந்து ஜெய் ஸ்ரீராம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார். பின்னர் தமிழில் பொறியாளன், வில் அம்பு மற்றும் தெலுங்கில் காதலி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
இருந்தும் நல்ல வரவேபை பெறவில்லை ஹரீஷ் கல்யாண். இதையடுத்து இவர் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது பிக்பாஸ். முதல் சீசனில் கலந்து கொண்ட இவர் 53 ஆம் நாள் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்நுழைந்தார். ரசிகர்களை வெகுவாக ஈர்த்த இவர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
பிக்பாஸ் வெற்றியை தொடர்ந்து பியார் பிரேமா காதல் படத்தில் நாயகனாக நடித்தார் ஹரீஷ். ரைசா வில்சன் ஜோடியாக நடித்தார். இவரும் சீசன் 1-ல் போட்டியாளராக இருந்தவர். படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது.
தற்போது நூறு கோடி வானவில், டீசல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ஹரீஷ். இதில் டீசல் படத்தின் முதல் பார்வை போஸ்ட்டர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.. இந்நிலையில் ஹரிஷுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும். பெண் தேடும் வேலையை ஹரீஷின் பெற்றோர்கள் மும்மரமாக ஈடுபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவரது திருமணம் ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் துவக்கத்தில் நடைபெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.