சீயானுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஏழு பிலிம்பேர் விருதுகள், தேசிய திரைப்பட விருது மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட விருதுகளை குவித்துள்ள இவர் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர்.
என் காதல் கண்மணி திரைப்படத்தில் அறிமுகமான இவர் வாழ்வில் திரும்பு முனையை ஏற்படுத்திய படம் சேது. இந்த படத்திற்கு பிறகே சீயான் என அறியப்படுகிறார் விக்ரம். இதில் விக்ரமின் நடிப்பு அவருக்குள் இருக்கும் ஒரு விஸ்வரூபத்தை வெளிக்கொணர்ந்து திரையுலகில் பிரளயத்தை கொணர்ந்தது. இந்த படம் பாலாவின் இயக்கத்தில் உருவானதாகும்.
மேலும் செய்திகள்... 2 முறை விவாகரத்து பெற்ற நடிகையுடன் 4-வது திருமணமா? - உண்மையை போட்டுடைத்த 60 வயது நடிகர்