பட வாய்ப்புகள் குறைந்ததால்...மீண்டும் அண்ணனுடன் 2-ம் பாகத்தில் இணைய திட்டமிட்ட ஜெயம் ரவி!

Published : Jul 02, 2022, 01:18 PM ISTUpdated : Jul 02, 2022, 01:27 PM IST

சமீபகாலமாக பெரிய வெற்றிகளை பெறாத ஜெயம் ரவி..தனது முந்தைய வெற்றியான தனி ஒருவன் பார்ட் 2 வை எடுக்க ராஜாவிடம் கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
14
பட வாய்ப்புகள் குறைந்ததால்...மீண்டும் அண்ணனுடன் 2-ம் பாகத்தில் இணைய திட்டமிட்ட ஜெயம் ரவி!
Jayam Ravi

திரையுலகிற்கு வந்து 19 ஆண்டுகளில் சில வெற்றிகளை மட்டுமே கண்டுள்ளார் ரவி. தனது அண்ணன் ராஜாவின் இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தில் நாயகனாக அறிமுகமானார் இவருடன் சதாவும் தா இல் இண்டஸ்ட்ரிக்கு என்ட்ரி கொடுத்தார். ரசிகர்கள் மத்தியில் பெறாதவரை பெற்ற இந்த படம் ரவிக்கு நல்ல அறிமுகமாகவே அமைந்தது.

24
jayam ravi

பின்னர் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, மழை, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்தார். பேமிலி சென்டிமெண்டாக அமைந்த இந்த திட்ட வரிசைகள் ரசிகர்களை கவர்ந்திருந்தன. இருந்தும் ஒரு ஸ்ட்ராங்கான இடத்தை ஜெயம் ரவிக்கு கொடுக்கவில்லை.

மேலும் செய்திகள்... Aishwarya: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓப்பனாக சொன்ன ஹெல்த் சீக்ரெட்...இதெல்லாம் ட்ரை பண்ணுங்கோ..அப்பறம் பாருங்க

இதையடுத்து ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்த நாயகம் தாம் தூம், பேராண்மை, நிமிர்ந்து நில், போகன், தனி ஒருவன், மிருதன் என திரில்லர் சீக்வன்ஸ்களில் நடித்திருந்தார். இருந்தும் இடையிடையே தனது பழைய பாணியை விடாமல் லவ் ஜானர் படங்களிலும் தோன்றினார் ரவி.

34
Jayaram Ravi

இதில் தனி ஒருவன் நல்ல வரவேற்பை பெற்றதுடன் , வசூலையும் அள்ளி கொடுத்தது. ரவியின் சகோதரர் மோகன் ராஜா இயக்கிய இந்த படம் ராஜாவின் சொந்த எழுத்தில் உருவானது. முந்தைய கதைகள் மாற்று மொழி படங்களில்ன் ரீமேக்காகவே இருந்தது. முதல் சொந்த உருவாக்கமே அவருக்கு நல்ல ஓப்பனிங்காக அமைந்தது. 32 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் கிட்டத்தட்ட 105 கோடியை வசூலித்தது. இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என இயக்குனர் முன்பு அறிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்... Ponniyin selvan : வருகிறான் சோழன்... மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ பட அப்டேட் வந்தாச்சு

44
jayam ravi

அரவித் சாமியின் மாரு பிரவேசமாக அமைந்த இந்த படத்தில் அவரது நடிப்பு வெகுவாக ஈர்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது பொன்னியின் செல்வனின் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி நடித்து வருகிறார். அதோடு அகிலன் இறைவன் உள்ளிட்ட படங்களையும் தன கைவசம் வைத்துள்ள ரவி தனது முந்தைய வெற்றி படமான தனி ஒருவன் 2 வை உருவாக்க தனது அண்ணனிடம் மன்றாடி வருவதாக கூறப்படுகிறது. இந்த படம் கடந்த 2015-ல் வெளியானது.

மேலும் செய்திகள்... 2 முறை விவாகரத்து பெற்ற நடிகையுடன் 4-வது திருமணமா? - உண்மையை போட்டுடைத்த 60 வயது நடிகர்

Read more Photos on
click me!

Recommended Stories