இந்நிலையில், யானை படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.4.5 கோடி வசூலித்துள்ளதாம். குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 3.5 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் அருண் விஜய்யின் கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாக யானை மாறி உள்ளது. இன்றும், நாளையும் விடுமுறை தினங்கள் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.