ஜெய் பீம் எங்களோட கதை... திருடி படமா எடுத்துட்டாங்க..! சூர்யா மீது கதை திருட்டு வழக்கு - ரசிகர்கள் அதிர்ச்சி

Published : Jul 02, 2022, 09:36 AM ISTUpdated : Jul 02, 2022, 09:38 AM IST

Jai Bhim story theft case : ஜெய்பீம் படத்தின் கதை தங்களது வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் என்றும், அதனை திருடி நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் படமாக எடுத்துவிட்டதாகவும் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

PREV
14
ஜெய் பீம் எங்களோட கதை... திருடி படமா எடுத்துட்டாங்க..! சூர்யா மீது கதை திருட்டு வழக்கு - ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமாவில் கடந்த வெளியான படங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட படம் என்றால் அது ஜெய் பீம் தான். சூர்யா நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் மணிகண்டன், லிஜோ மோல், ரெஜிஷா விஜயன் உள்பட ஏராளமானோர் நடித்திருந்தனர். தமிழ்நாட்டில் 1990-களில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள்... ‘காஃபி வித் காதல்’ படத்துக்காக இளையராஜாவின் பிளாக்பஸ்டர் ஹிட் பாடலை ரீமிக்ஸ் செய்த யுவன் - வைரலாகும் வீடியோ

24

2டி நிறுவனம் சார்பாக சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையையொட்டி நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் ஆனது. வெளியானது முதல் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இப்படம் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியது. குறிப்பாக வன்னியர்களை இப்படத்தில் இழிவுபடுத்தியதாக கூறி பாமக-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதையும் படியுங்கள்... காதல் மனைவி நயன்தாரா உடன் காத்துவாக்குல ரொமான்ஸ் பண்ணும் விக்னேஷ் சிவன் - வைரலாகும் போட்டோஸ்

34

இவ்வாறு பல்வேறு சர்ச்சைகளை இப்படம் எதிர்கொண்டாலும், ஆஸ்கர் வரை சென்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தது. குறிப்பாக ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் ஜெய் பீம் படத்தின் காட்சிகள் இடம்பெற்று இருந்தது. தமிழ் சினிமாவில் இத்தகைய பெருமையை பெற்ற முதல் படம் ஜெய் பீம் தான். இதுதவிர பல்வேறு சர்வதேச பட விழாக்களிலும் விருதுகளை வென்றது.

இதையும் படியுங்கள்... Dil Raju : 51 வயதில் தளபதி 66 பட தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு பிறந்த வாரிசு - குவியும் வாழ்த்துக்கள்

44

இந்நிலையில், ஜெய்பீம் படத்தின் கதை தங்களது வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் என்றும், அதனை திருடி நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் படமாக எடுத்துவிட்டதாகவும் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநகர நடுவர் நீதிமன்றத்தில் குளஞ்சியப்பன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வருகிற ஜூலை 15-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories