காதல் மனைவி நயன்தாரா உடன் காத்துவாக்குல ரொமான்ஸ் பண்ணும் விக்னேஷ் சிவன் - வைரலாகும் போட்டோஸ்

First Published | Jul 2, 2022, 8:07 AM IST

Nayanthara Vignesh shivan : நடிகை நயன்தாராவை கட்டியணைத்தவாறு இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன் “நெனச்சா தோணும் இடமே” என தான் எழுதிய பாடல் வரிகளை கேப்சனாக கொடுத்துள்ளார். 

போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் விக்னேஷ் சிவன். இவரும், நடிகை நயன்தாரா கடந்த 2015-ம் ஆண்டு காதல் வயப்பட்டனர். 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி கடந்த மாதம் திருமண பந்தத்தில் இணைந்தது.

இதையும் படியுங்கள்... Dil Raju : 51 வயதில் தளபதி 66 பட தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு பிறந்த வாரிசு - குவியும் வாழ்த்துக்கள்

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமணம் மகாபலிபுரத்தில் கடற்கரையோரம் அமைந்திருந்த பிரம்மாண்டமான ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் ஏராளமான நடிகர், நடிகைகளும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்ததும் இருவரும் ஹனிமூன் சென்றனர்.

இதையும் படியுங்கள்... 2022-ன் முதல் பாதி ஓவர்! விஜய், அஜித் சொதப்பினாலும் தமிழ் சினிமாவில் வசூலை வாரிக்குவித்த படங்களின் லிஸ்ட் இதோ

Tap to resize

ஹனிமூன் கொண்டாட்டத்துக்காக ஒரு வாரம் தாய்லாந்து நாட்டுக்கு சென்றிருந்த இந்த ஜோடி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்தியா திரும்பியது. இங்கு வந்ததும் நேராக மும்பை சென்ற நடிகை நயன்தாரா, அங்கு நடைபெற்று வரும் ஷாருக்கானின் ஜவான் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார். விக்னேஷ் சிவனும் தான் அடுத்ததாக இயக்க உள்ள அஜித்தின் ஏகே 62 படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படியுங்கள்... 42 வயதிலும் குறையாத கவர்ச்சி... பிகினி உடையணிந்து கடலில் மிதக்கும் வாளமீனு மாளவிகா - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்

இந்நிலையில், நடிகை நயன்தாராவை கட்டியணைத்தவாறு இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன் “நெனச்சா தோணும் இடமே” என தான் எழுதிய பாடல் வரிகளை கேப்சனாக கொடுத்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Latest Videos

click me!