2 முறை விவாகரத்து பெற்ற நடிகையுடன் 4-வது திருமணமா? - உண்மையை போட்டுடைத்த 60 வயது நடிகர்

First Published | Jul 2, 2022, 12:15 PM IST

Naresh Babu : இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகை பவித்ரா லோகேஷ், விரைவில் நடிகர் நரேஷ் பாபுவை மூன்றாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் பரவி வந்தது. 

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பவித்ரா லோகேஷ். கன்னடத்தில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தமிழிலும் ராதாமோகன் இயக்கிய கவுரவம், விஷாலின் அயோக்யா, விஜய் சேதுபதி உடன் க.பெ.ரணசிங்கம் மற்றும் சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான வீட்ல விசேஷம் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... சோமேட்டோ மூலம் ரசிகர்களுக்கு இலவசமாக ட்ரீட் வைத்த அனிருத்

இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகை பவித்ரா லோகேஷ், விரைவில் மூன்றாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் பரவி வந்தது. இவர் நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரரான நரேஷ் பாபுவை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்பட்டது. நரேஷ் பாபு ஏற்கனவே 3 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர் ஆவார்.

இதையும் படியுங்கள்... முதல் நாளே இத்தனை கோடியா..! பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் அருண் விஜய்யின் ‘யானை’

Tap to resize

இதுகுறித்து இருவரும் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் இருந்து வந்ததால், இந்த திருமணம் உண்மையாக இருக்கும் என கருதி வந்த நிலையில், தற்போது நடிகர் நரேஷ் பாபு இதுகுறித்து ஓப்பனாக பேசி உள்ளார். அதன்படி, தனக்கும் பவித்ராவுக்கு திருமணம் நடக்க இருப்பதாக பரவி வரும் தகவல் வெறும் வதந்தி என்றும், இவற்றையெல்லாம் தனது மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி தான் பரப்பி வருவதாக நரேஷ் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்... ஜெய் பீம் எங்களோட கதை... திருடி படமா எடுத்துட்டாங்க..! சூர்யா மீது கதை திருட்டு வழக்கு - ரசிகர்கள் அதிர்ச்சி

எனக்கும் பவித்ராவுக்கும் இடையே எந்த விதமான உறவும் இல்லை. நாங்க இருவரும் நல்ல நண்பர்களாகவே பழகி வருகிறோம் என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மறுபுறம் நடிகை பவித்ரா பேஸ்புக்கில் தன்னைப்பற்றி அவதூறு பரப்பப்படுவதாகவும், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்ககோரியும் மைசூரு சைபர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Latest Videos

click me!