Suriya Jyotika Record : விஜய் - அஜித் நட்பின் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய சூர்யா - ஜோதிகாவின் காதல்...!

Published : Sep 17, 2026, 11:05 AM IST

Suriya Jyotika Record : அஜித்தும் விஜய்யும் சந்தித்த வீடியோவுக்கு கிடைத்த லைக்ஸை விட சூர்யா ஜோதிகாவின் திருமண நாள் வீடியோ அதிக லைக்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.

PREV
14
சூர்யா ஜோதிகாவின் காதல் வீடியோ படைத்த சாதனை

நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டது அனைவரும் அறிந்ததே. அவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. அண்மையில் தங்களது 20வது திருமண நாளை செம கிராண்ட் ஆக செலிபிரேட் பண்ணி இருந்தார்கள். இதற்காக தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வெளிநாட்டுக்கு சென்றிருந்த சூர்யா, அங்கு தங்கள் பிள்ளைகள் முன்னிலையில், ஜோதிகாவை மீண்டும் கரம் பிடித்தார், இதனை தி சீக்குவல் என்கிற பெயரில் வீடியோவாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தனர்.

Suriya Jyotika : மகன், மகள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்துகொண்ட சூர்யா - ஜோதிகா... வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்

24
சூர்யா - ஜோதிகாவின் திருமண வீடியோ

அந்த வீடியோவில் சூர்யா கோர்ட் சூட்டில் டிப் டாப்பாக ரெடியாகி வந்து நிற்க, சற்று நேரத்தில் வெள்ளை நிற கவுன் அணிந்து தேவதை போல் எண்ட்ரி கொடுத்தார் ஜோதிகா. அவரைப் பார்த்ததும் எமோஷனல் ஆன சூர்யா, கண்ணில் நீர் ததும்ப ததும்ப நின்று கொண்டிருக்க, பின்னர் அங்கு கிறிஸ்தவ முறைப்படி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். சூர்யா - ஜோதிகாவின் இந்த வீடியோவை பார்த்த பலரும், அவர்களின் காதலைப் பற்றி சிலாகித்து பேசி வருகின்றனர். இத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அவர்கள் இருவருக்கும் இடையேயான காதல் இன்னும் அப்படியே இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

34
விஜய் - அஜித் சந்திப்பு வீடியோ

சூர்யா - ஜோதிகாவின் இந்த திருமண வீடியோ தான் தற்போது இன்ஸ்டாவில் ஒரு சம்பவம் செய்திருக்கிறது. இந்த வீடியோ வெளிவந்ததற்கு இரு தினங்களுக்கு முன்பு தான் லண்டனில் ஒரு ஐகானிக் சம்பவம் நடந்தது. தமிழ் திரையுலகில் இரு பெரும் துருவங்களாக இருந்து வந்த விஜய் மற்றும் அஜித் இருவரும் பொது வெளியில் ஒன்றாக சந்தித்துக் கொண்டனர். லண்டனில் அஜித் பங்கேற்ற கார் ரேஸை துவக்கி வைப்பதற்காக அங்கு சென்றிருந்த விஜய், அஜித்தை பார்த்ததும் ஓடோடி வந்து கட்டிப்பிடித்து தன்னுடைய அன்பை பகிர்ந்து கொண்டார்.

44
நட்பை விட காதலுக்கு மவுசு

இதுகுறித்த வீடியோவை முதல்வர் விஜய் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதும், அதற்கு லைக்குகளும், கமெண்ட்டுகளும் குவியத் தொடங்கின. அந்த வீடியோவுக்கு சுமார் 22 லட்சம் லைக்குகள் இரண்டு நாட்களில் கிடைத்திருந்தன. இதெல்லாம் முறியடிக்கவே முடியாது என விஜய் - அஜித் ரசிகர்கள் தெனாவட்டாக இருக்க, அந்த சாதனையை வெறும் 8 மணிநேரத்தில் சல்லி சல்லியாய் நொறுக்கி இருக்கிறது சூர்யா - ஜோதிகா ஜோடி. அவர்களின் திருமண நாள் வீடியோ பதிவிட்ட 8 மணிநேரத்திலேயே 35 லட்சம் லைக்குகளை பெற்று நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. நட்பை விட காதலுக்கு பவர் அதிகம் என்பதை இந்த வீடியோ உணர்த்தி இருப்பதாக நெட்டிசன்கள் ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.

Vijay - Ajith : லண்டனை ஸ்தம்பிக்க வைத்த தல - தளபதி... அஜித்தை பார்த்ததும் ஓடோடி வந்து கட்டிப்பிடித்த விஜய் - வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories