தி டார்க் ஹெவன்
பாலாஜி இயக்கியுள்ள ‘தி டார்க் ஹெவன்’ ஒரு தமிழ் திரைப்படமாகும். சித்து சித், தர்ஷிகா, ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார் ஜானகிராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.
இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்
ஷ்யாமின் கிரீஷ் இயக்கியுள்ள மலையாள திரைப்படம் ‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’. சங்கீத் பிரதாப், ஷரஃபுதீன், அகிலா பார்கவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
பாரிஸ் கஃபே
சரஜ் சீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாரிஸ் கஃபே’ படத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல் கே. மனோகரன், விஜய் விஸ்வா, நயனா சாய், சாய் விக்கி, பிபின் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ் படமான இது செப்டம்பர் 18-ம் தேதி வெளியாக உள்ளது.
ஹப்பி ஜர்னி
அபிராம் நாயுடு இயக்கத்தில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படம் ‘ஹப்பி ஜர்னி’. அன்னபூர்ணியம்மா, ஆமணி, ஜான்சி, பயல் ராதாகிருஷ்ணன், ஜினிஷா அலிஷெட்டி, ரூபா ஸ்ரீனிவாஸ், சுனைனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 18-ம் தேதி திரைக்கு வருகிறது.