சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து தங்களுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான 2d நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளனர். இப்படத்தின் சூட்டிங் பணிகள் முழுமையாக முடிவடைந்து, போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே நேரம் பூஜா ஹெக்டேவின் தோற்றம் சில ட்ரோல்களுக்கும் ஆளானது. இதுவரை மாடன் உடையில் பார்த்த பூஜா ஹெக்டேவுக்கு சேலை மற்றும் குடும்ப பாங்கான கதாபாத்திரம் செட் ஆகவில்லை என சில ரசிகர்கள் கூறி வந்தனர்.
24
Pooja Hedge
நடிகர் சூர்யா இந்த படத்தில் காதல் மற்றும் எமோஷன் கலந்த டச்சிங்கான ஹீரோ கதாபாத்திரத்தில் மட்டும் இன்றி, ஒரு கேங்ஸ்டாராகவும் மிரட்டியுள்ளார். சூர்யா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படம் இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்ஸ் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே சூர்யாவின் 'ரெட்ரோ' திரைப்படம் மே ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அந்த தகவல் உறுதியாகி உள்ளது.
அதன்படி அஜித்துக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும் அவருடைய பிறந்தநாள் அன்று... அவருக்கே போட்டியாக மே 1 அன்று 'ரெட்ரோ' திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்த தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு 'கங்குவா' மூலம் ரசிகர்களை சற்று அப்செட் செய்த சூர்யா இப்படத்தின் மூலம் வெறித்தனமான கம்பாக்கை கொடுப்பார் என்பது ரசிகர்களின் ஆவல். மேலும் விடாமுயற்சி - குட் பேட் அக்லீ ஆகிய பாடங்கள் மே 1-ஆம் தேதிக்கு முன்பே வெளியாகும் நிலையில், அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் ஏற்கனவே வெளியான சூப்பர் ஹிட் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
44
Retro Release Date