பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷிகா வெளியேற முக்கிய காரணம் விஷால் தான் என மக்கள் நினைப்பதாக உள்ளே சென்ற வைல்டு கார்டு போட்டியாளர்கள் கூறிய நிலையில், தற்போது தர்ஷிகா அதற்க்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கிய நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் 19-ஆம் தேதி முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி துவங்கும் போது, பிக்பாஸ் வீட்டிற்குள் மொத்தம் 18 போட்டியாளர்கள் வந்த நிலையில்... வைல்டு கார்டு சுற்று மூலம் மொத்தம் 6 போட்டியாளர்கள் நுழைந்தனர். இவர்களில் இதுவரை மொத்தம் 16 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், அருண், சௌந்தர்யா, ரயான், ஜாக்குலின், தீபக், முத்துக்குமரன், பவித்ரா, விஷால் ஆகியோர் உள்ளே உள்ளனர்.
25
Vishal and Tharshika Love
ஆனால் இந்த வாரம், யாரும் எதிர்பாராத விதத்தில்... ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய 8 போட்டியாளர்களை உள்ளே அனுப்பியுள்ள பிக்பாஸ் அவர்கள் மூலம் மிட் வீக் எவிக்ஷனை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். அதே போல் இப்போது உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்கில் தோற்று போனால், வைல்ட் கார்டு போட்டியாளர் அவரின் இடத்திற்கு ரீபிளேஸ் செய்யப்படுவார் என்பதையும் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த போட்டியாளர்கள் அனைவரும் விஷால் லவ் கன்டென்ட் கொடுத்து விளையாடு வருவதாகவும், காதலை ஒரு கருவி போல் பயன்படுத்தி இரண்டு போட்டியாளர்களை வெளியேற்றி விட்டதாக கூறியது விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்தது. சாச்சனா விஷாலை நீ லவ்வர் பாய் அல்ல, ஒரு பிளே பாய் என பேசியதை நினைத்து, விஷால் கலங்கி அழுதார். இந்த விஷயம் மீண்டும் சமூக வலைத்தளத்தில் பேசும் பொருளாக மாறியுள்ள நிலையில், இதுகுறித்து தர்ஷிகா மிகவும் எமோஷனலாக விளக்கம் கொடுத்துள்ளார்.
45
Bigg Boss Tamil Season 8 show
இதுகுறித்து தர்ஷிகா வெளியிட்டுள்ள பதிவில், "பிக் பாஸ் 8 வீட்டிற்குள் நுழையும் போட்டியாளர்கள், நான் வெளியேற்றப்பட்டதற்கான காரணத்தை கேள்வி கேட்க தூண்டப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது வெளியேற்றத்திற்கான முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன், அதற்காக வேறு யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை.
நான் வேண்டுமென்றே யாரையும் காயப்படுத்தியதில்லை, யார் மீதும் அன்பு காட்டியது இல்லை. அதே போல் எந்த ஒரு சூழலையும் எனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதோ இல்லை, எனது உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தினேன், இது தேவையற்ற நகைச்சுவையாக மாறுவதை இப்போது பார்க்கிறேன். எனது அனைத்து கவலைகளும் சம்பந்தப்பட்ட நபருடன் நேரடியாக ஒரே மேடையில் மட்டுமே கேட்கப்படும் மற்றும் தீர்க்கப்படும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். இதற்காக மற்றவர்களை குறை கூறுவதையோ அல்லது இழிவுபடுத்துவதையோ தவிர்த்துக் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். என கூறி இதுவும் கடந்து போகும் என தர்ஷிகா கூறியுள்ளார். இதன் மூலம் கண்டிப்பாக விஷாலை நேரடியாக கேள்வி கேட்க தர்ஷிகா தயாராக உள்ளார் என்பது தெரிகிறது.