இப்படியொரு பிளாஷ்பேக்கில் நான் தப்பு பண்ணிட்டேன்: சிகப்பு ரோஜாக்கள் பட மிஸ்டேக்கை பகிர்ந்த பாரதிராஜா!

First Published | Jan 8, 2025, 3:11 PM IST

Bharathiraja Share Sigappu Rojakkal Movie Secret : சிகப்பு ரோஜாக்கள் படத்தில் செய்த தவறு பற்றி இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

Bharathiraja Share Sigappu Rojakkal Movie Secret

Bharathiraja Share Sigappu Rojakkal Movie Secret : இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் 1978ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் சிகப்பு ரோஜாக்கள். இந்தப் படத்தில் கமல் ஹாசன், ஸ்ரீதேவி, கவுண்டமனி, பாக்யராஜ் மற்றும் வடிவுக்கரசி ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்த நிலையில் தான் இந்த படத்தின் அனுபவம் பற்றியும், படத்தில் செய்த தவறுகள் பற்றியும் என் இனிய தமிழ் மக்களே என்ற சேனலில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Sigappu Rojakkal Movie Secret, Director Bharathiraja

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: 20 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட படம் தான் சிகப்பு ரோஜாக்கள். இந்தப் படத்தில் வரும் கருப்பு பூனைக்காக நாங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டோம். ஆனால், கறுப்பு பூனை கிடைக்கவில்லை. அதோடு பூனைக்கு கேஸ் போடப்பட்டது. இந்தப் படத்தின் கதைக்கு எந்த ஹீரோவும் ஒத்துக் கொள்ளவில்லை. கமல் ஹாசன் ஒத்துக் கொண்டார். படத்தில் வரும் பங்களாவிற்காக பல இடங்களை தேடி திரிந்தோம்.

Tap to resize

Kamal Haasan, Sri Devi, Goundamani, Bhagyaraj

அப்போது சென்னை டி நகரில் உள்ள பங்களாவை பார்க்க, அந்த பங்களா பிடித்துவிட்டது. அங்கு படப்பிடிப்பு எடுத்தோம். 20 நாட்களில் படத்தோட ஷூட்டிங் முடிந்தது. கறுப்பு பூனைக்காக நாங்கள் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. ஒருவரிடமிருந்து பூனையை வாங்கி படப்பிடிப்பு எடுத்தோம். 2 நாட்கள் எந்த பிரச்சனையும் இல்ல. ஆனால், 3ஆவது நாளில் அந்த கருப்பு பூனையை காணோம். இதனால், பூனையை வளர்த்தவர் கேஸ் போட்டார். கடைசி வரை அந்த பூனையை கண்டுபிடிக்கவில்லை. ஒருவழியாக அவரை சமாதானப்படுத்த கேஸ் வாபஸ் பெற்றார்.

Bharathirajaa, Sigappu Rojakkal, Sri Devi Movie

இந்தப் படத்தில் டெக்னிக்கல்ல நான் ஒரு தவறு செய்துவிட்டேன். படத்தில் கமல் திலீப் என்ற ரோலில் நடித்திருப்பார். ஒரு அறைக்குள் எழுதப்பட்ட வாசகம், திலீப்பின் இளமை வயது புகைப்படம் என்று எல்லாமே இருக்கும். அங்கு பிளாஷ்பேக் ஆரம்பித்து ஒரு இடத்தில் முடியும். திலீப்பின் பிளாஷ்பேக் பற்றி அவர் தான் சொல்ல வேண்டும். ஆனால் ஸ்ரீதேவிக்கு திலிப்பின் இளமை பருவங்கள் எப்படி தெரியும்? அதனை நான் மறைத்துவிட்டேன். ஆனால், அந்தப் படம் வெற்றியை பெற்றது. ஒரு காலத்தில் படம் பார்க்க தியேட்டர் முன்பு ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். ஆனால் இன்று செல்போனில் படம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

Latest Videos

click me!