விவாகரத்தான அந்த நடிகையை தான் ரொம்ப பிடிக்கும்; ஷாக் கொடுத்த ராம் சரண்!

First Published | Jan 8, 2025, 2:41 PM IST

'கேம் சேஞ்சர்' படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் தீவிர கவனம் செலுத்தி வரும் ராம் சரண், தனக்கு மிகவும் பிடித்த நடிகை யார் என்பது குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
 

Ram Charan Game Changer Movie

மெகா பவர் ஸ்டார் என தெலுங்கு ரசிகர்களால் அழைக்கப்படும் ராம் சரண், 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர், பான் இந்தியா அளவில் கவனம் பெற்ற நடிகையாக உயர்ந்தார். தொடர்ந்து பான் இந்தியா படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆக உள்ளது. 
 

Game Changer Budget and Casting

ரூ.400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை, தில் ராஜு தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ராம் சரண் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அப்பா ராம் சரணுக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ள நிலையில், IPS அதிகாரியாக நடித்துள்ள மகன் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீசுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில்... தொடர்ந்து இந்த படம் குறித்த பல புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது.

நயன்தாராவிடம் ரூ.10 கோடி கேட்டு தனுஷ் தொடர்ந்த வழக்கு; நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

Tap to resize

Unstoppable Show

அந்த வகையில் சமீபத்தில் ராம் சரண், நந்தமுரி பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கி வரும் அன்ஸ்டாபபில் நிகழ்ச்சியில் 'கேம் சேஞ்சர்' படத்தின் புரோமோஷனுக்காக கலந்து கொண்டும் அவர் கேட்ட பல கேள்விகளுக்கு அதில் அளித்தார்.

Ram Chanran about Favorite Heroine

அப்போது ராம் சரணிடம்  பாலகிருஷ்ணா, இதுவரை பல முன்னணி நடிகைகளுடன் நடித்துளீர்கள் அவர்களின் உங்களுக்கு மிகவும் பிடித்தவர் யார் என்று கேட்டு, 3 சாய்ஸ் கொடுத்தார். அதில் ஆலியா பட், கியாரா அத்வானி மற்றும் சமந்தாவின் பெயர் கேட்டகப்பட்டிருந்தது. இதற்க்கு ராம் சரண் சமந்தாவின் பெயரை கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 

பிக்பாஸ் வீட்டுக்குள் கன்ஃபாம் ஆன காதல்! சௌந்தர்யாவுடன் திருமணம் எப்போது? விஷ்ணு உடைத்த ரகசியம்!
 

Samantha is Ram Charan Favorite Actress

நடிகை சமந்தா மற்றும் ராம் சரண் இருவரும், கடந்த 2018-ஆம் ஆண்டு 'புஷ்பா' பட இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியான 'ரங்கஸ்தலம்' படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் ராம் சரண் மற்றும் சமந்தாவின் நடிப்பு பாராட்டை பெற்ற போதிலும், வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராம் சரண் 'கேம் சேஞ்சர்' படத்தின் ரிலீசுக்கு பின்னர் புச்சிபாபு சனா இயக்கத்தில் நடிக்க உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Latest Videos

click me!