நயன்தாராவிடம் ரூ.10 கோடி கேட்டு தனுஷ் தொடர்ந்த வழக்கு; நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

First Published | Jan 8, 2025, 1:53 PM IST

நடிகை நயன்தாரா அவரது Nayanthara: Beyond the Fairytale ஆவண படத்தில், தனுஷ் தயாரிப்பில் வெளியான 'நானும் ரவுடிதான்' படத்தின் காட்சியை பயன்படுத்தியதற்காக 10 கோடி இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கின் விசாரணை, இன்று நடைபெற்ற நிலையில் தற்போது நீதிமன்றம் அதிரடியை தீர்ப்பு வழங்கியுள்ளது.
 

Nayanthara And Dhanush Issue

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாகவும், தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்துடனும் வலம் வந்து கொண்டிருப்பவர் நயன்தாரா. இவரது திருமணம் குறித்த வீடியோ நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இதை Nayanthara: Beyond the Fairytale என்கிற பெயரில் ஒரு ஆவண படமாக நெட்பிளிக்ஸ் வெளியிட்டது. இதற்காக நயன்தாரா மற்றும் விஜய் சிவன் இருவரும் சுமார் 25 கோடி வாங்கியதாகவும் தகவல் வெளியானது. திருமணத்திற்கான மொத்த செலவே, ரூ. 5 கோடி கூட வராத நிலையில், தன்னுடைய திருமணத்தை வைத்து நயன்தாரா? பல கோடி லாபம் பார்த்ததாக சில திரைப்பட விமர்சகர்கள் நயன்தாராவின் திருமணம் குறித்து விமர்சித்து வந்தனர்.
 

Nayanthara: Beyond the Fairytale doucmentry

Nayanthara: Beyond the Fairytale என்கிற பெயரில் வெளியான இந்த ஆவணப்படத்தில், நயன்தாரா நடித்த சில முக்கிய திரைப்படங்களின் காட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தது. அந்த வகையில் நடிகர் தனுஷ் தயாரிப்பில் 2015 ஆம் ஆண்டு, நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளும் இடம்பெற்றது. நானும் ரவுடிதான் திரைப்படம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர காரணமாக இருந்த திரைப்படம் என்பதால், தங்களுடைய முதல் சந்திப்பு குறித்த காட்சியை இதில் இடப்பெற செய்திருந்தனர்.
 

Tap to resize

Nayanthara 3 Page Statement

மேலும் நடிகர்கள் தனுஷ், தன்னுடைய அனுமதி இன்றி தான் தயாரித்த படத்தின் காட்சியை பயன்படுத்தியதற்காக சுமார் 10 கோடி இழப்பீடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. தனுஷின் இந்த நோட்டீசுக்கு நயன்தாரா தரப்பில் இருந்து சுமார் மூன்று பக்க அறிக்கை வெளியிட்டு தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதை போல் தனுஷிடம் அனுமதி கேட்க இரண்டு வருடங்கள் போராடியதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
 

Dhanush Filed Case Against Nayanthara

இதைத்தொடர்ந்து நயன்தாராவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்க வேண்டும் என நடிகர் தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அவருக்கு வழக்கு தொடர அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து 'நானும் ரவுடிதான்' பட காட்சியை பயன்படுத்துவதற்காக நடிகர் தனுஷ், நயன்தாரா ரூ.10 கோடி இழப்பீடு தரவேண்டும் என வலியுறுத்தியதோடு, இந்த காட்சியை ஆவணப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
 

Nayanthara And Dhanush Case Final Hearing adjourned

மேலும் இது குறித்து நயன்தாரா தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்குமாறு நீதிமன்றம் கூறியது. இதற்கு நயன்தாரா திரைப்படத்தில் பயன்படுத்திய காட்சியை இப்படத்தில் இணைக்கவில்லை என்றும், தங்களுடைய சொந்த சேகரிப்பில் இருந்தே இந்த காட்சியை பயன்படுத்தியதாக விளக்கம் கொடுத்தார். இந்த சம்பவம் ஒருபுறம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை, நீதிபதி அப்துல் குத்தூஸ், முன்பு விசாரணைக்கு வந்தபோது, நெட்பிலிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜனவரி 22ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, இனி கால அவகாசம் கேட்கக் கூடாது என்றும், அன்றைய தினம் அனைத்து இடைக்கால மனுக்கள் மீதான விசாரணையை தள்ளிவைத்தார். நயன்தாராவுக்கு சாதகமாக தீர்ப்பு வருமா? அல்லது தனுஷுக்கு சாதகமாக தீர்ப்பு வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Latest Videos

click me!