அடுத்த அட்லீயாக மாறிவிட்டாரா ஷங்கர்? கேம் சேஞ்சர் இந்த தமிழ் படத்தின் காப்பி தானாம்!

First Published | Jan 8, 2025, 1:53 PM IST

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் விஜயகாந்த் நடித்த தமிழ் படத்தின் காப்பி என ப்ளூ சட்டை மாறன் கூறி இருக்கிறார்.

Shankar GameChanger

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு ஹீரோ ராம்சரண் நடித்துள்ள படம் கேம் சேஞ்சர். இப்படத்தை வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படத்தில் நடிகர் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்திருக்கிறார். மேலும் அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, ஸ்ரீகாந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் பாடல் அனைத்தையும் சுமார் 90 கோடி செலவில் படமாக்கி இருக்கிறார் ஷங்கர்.

RamCharan

கேம் சேஞ்சர் திரைப்படம் 450 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. இந்த படத்தின் கதை கார்த்திக் சுப்புராஜுடையது. அவர் லாக்டவுன் சமயத்தில் இயக்குனர் ஷங்கரிடம் சொல்லி, இது உங்க ஸ்டைலில் இருப்பதாக சொல்ல, ஷங்கருக்கும் அது பிடித்துப் போய் அதற்கு திரைக்கதை அமைத்து பிரம்மாண்டமாக எடுத்துள்ளார். இப்படத்தில் நடிகர் ராம்சரண் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற ஜனவரி 10ந் தேதி பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்... கேம் சேஞ்சர் பட ரிலீசுக்கு முட்டுக்கட்டை போடும் லைகா; சிக்கலில் ஷங்கர் படம்?

Tap to resize

Shankar, Ramcharan

பிரம்மாண்ட படங்கள் ரிலீஸ் சமயத்தில் பல சிக்கல்களை சந்திப்பதுண்டு. அந்த வகையில் கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடக்கூடாது என லைகா அண்மையில் போர்க்கொடி தூக்கி இருந்தது. ஏனெனில் ஷங்கர் தங்கள் தயாரிப்பில் உருவாகும் இந்தியன் 3 படத்தின் ஷூட்டிங்கை முடித்துக் கொடுக்காமல் கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யக் கூடாது என்று கங்கனம் கட்டிக் கொண்டு இருந்தது லைகா. பின்னர் கமல்ஹாசன் தலையிட்டு இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்த்து வைத்தார்.

Blue Sattai Maran

இதனிடையே தற்போது இப்படம் காப்பியடிக்கப்பட்டது எனக் கூறி சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், கூறி இருப்பது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதன்படி கேம் சேஞ்சர் திரைப்படம் விஜயகாந்த் நடித்த தென்னவன் படத்தின் காப்பி என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், நேர்மையான IASஅதிகாரி ராம் சரணுக்கும், அதிகாரம் மிக்க அரசியல்வாதி எஸ்.ஜே.சூர்யாவுக்கும் நடக்கும் மோதல்தான் கேம் சேஞ்சர் கதை. 

Game Changer, Thennavan

அதேபோல் நேர்மையான தேர்தல் கமிஷனரான தென்னவன் IAS vs தமிழக முதல்வர் நாசருக்கும் நடக்கும் மோதல் தான் தென்னவன் படத்தின் கதை. சத்ரியனை சுட்டு தெறி, ராஜதுரை படக் கதையை சுட்டு கோட் என எடுத்தவர்கள் தற்போது தென்னவன் படத்தையும் காப்பி அடித்துள்ளார்கள் என குறிப்பிட்டுள்ள அவர், கேப்டன் படங்களை வைத்து தொடர்ந்து கலர் ஓட்டி வருவதாக சாடி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... 2015ல நடந்தது அப்படியே 2025-ல் நடக்குதே.. டைம் லூப்பில் சிக்கிவிட்டதா தமிழ் சினிமா!

Latest Videos

click me!