பிக்பாஸ் ப்ரீஸ் டாஸ்க் மூலம் சௌந்தர்யா தன்னுடைய மனதில் இருந்த காதலை விஷ்ணுவிடம் அறிவித்த நிலையில், தற்போது விஷ்ணு திருமணம் குறித்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் வளரும் பல காதல்கள் ஒரு கன்டென்ட்டாகவே தான் இப்போது வரை பார்க்கப்படுகிறது. ஓவியா - ஆரவ், லாஸ்லியா - கவின், ஐஷு - நிக்சன், ரவீனா - மணிச்சந்திரா போன்ற பலர் பிக்பாஸ் வீட்டுக்குள் காதல் கன்டென்ட் கொடுத்து வெளியே வெளியே சென்றபின்னர் யார் என்றே தெரியாதது போல் நடந்து கொள்வார்கள். குறிப்பாக ரவீனா - மணிச்சந்திரா வெளியில் இருக்கும் போதே காதலித்ததாக கூறப்பட்ட நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இருவரும் உள்ளே வந்த பின்னர் தான் பிரேக் அப் செய்து பிரிந்தனர்.
25
Bigg Boss Lovers
ரவீனா, மணிச்சந்திராவை பிரிய காரணம், மணிச்சந்திராவின் முன்னாள் காதல் குறித்த தகவல் தெரிய வந்தது தான் என கூறப்பட்டது. இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த பிக்பாஸ் சீசன் போட்டியாளர் மற்றும் இந்த சீசனில் விளையாடி வரும் சௌந்தர்யா காதலுக்கு பாலமாக அமைந்துள்ளது.
சௌந்தார்யா மற்றும் விஷ்ணு இருவருமே நீண்ட கால நண்பர்கள். இருவரும் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வந்த, 'வேற மாறி ஆபீஸ்' தொடரில் இருவரும் இணைந்து நடித்தனர். எனவே இருவருக்கும் நல்ல நட்பு இருந்தது. இந்த நட்பு சௌந்தர்யா மனதில் காதலாக மாறி அடுத்த கட்டத்திற்கு சென்ற நிலையில், அதை அவர் விஷ்ணுவிடம் வெளிப்படுத்தவில்லை என கூறப்படுகிறது.
45
Vishnu Accept Soundharya Proposal
இந்நிலையில் ஃபிரீஸ் டாஸ்க் மூலம் உள்ளே வந்த விஷ்ணுவிடம், ஒரு பிளேட்டில் தன்னை திருமணம் செய்து கொள்வாயா என எழுதி புரபோஸ் செய்தார். இதை பார்த்து விஷ்ணுவுக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வது என்றே புரியாமல் போனது. சௌதர்யா தன்னுடைய சிறந்த தோழி தான் இருந்தாலும் ஐ லவ் யூ 2 என சௌந்தர்யாவின் காதலை ஏற்று கொண்டார். இதில் இருந்து சௌந்தர்யா மீது விஷ்ணுவுக்கும் ஒரு ஓரத்தில் காதல் இருந்தது வெளிப்பட்டது.
சௌந்தர்யா மற்றும் விஷ்ணு இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில், சமீபத்தில் விஷ்ணு கொடுத்த பேட்டி ஒன்றில் திருமணம் குறித்த சீக்ரெட்டை உடைத்துள்ளார். அதாவது நானும் - சௌந்தர்யாவும் சில காலம் காதலர்களாக சுற்றி விட்டு பிறகு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை. ஆனால் திருமணம் இந்த ஆண்டின் இறுதிக்குள் நடக்கும் என கூறியுள்ளார். மேலும் பிக்பாஸ் டைட்டில் கொடுத்தாரோ... இல்லையோ, வாழ்க்கை கொடுத்துள்ளார் அதற்க்கு நன்றி என விஷ்ணு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.