சினிமாவை விட்டு விலக நினைத்தேன்; ஆர்த்தி சொன்ன ‘அந்த’ வார்த்தையால் முடிவை மாற்றினேன் - SK

Published : Jan 08, 2025, 11:58 AM IST

நடிகர் சிவகார்த்திகேயன் மூன்று ஆண்டுக்கு முன்னர் சினிமாவை விட்டு விலகும் முடிவில் இருந்தபோது அவரது மனைவி சொன்ன வார்த்தைகள் அந்த முடிவை கைவிட வைத்ததாம்.

PREV
14
சினிமாவை விட்டு விலக நினைத்தேன்; ஆர்த்தி சொன்ன ‘அந்த’ வார்த்தையால் முடிவை மாற்றினேன் - SK
sivakarthikeyan Wife Aarthi

தமிழ் சினிமாவின் அடுத்த தளபதி ரேஞ்சுக்கு கொண்டாடப்பட்டு வருபவர் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான இப்படம் மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இதில் முகுந்த் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொறுந்தி இருந்தார் சிவகார்த்திகேயன். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

24
sivakarthikeyan

அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனின் கெரியரில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை படைத்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் 350 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய நடிகர்கள் என்றால் அது விஜய், கமல், ரஜினி மட்டும் தான், அந்த லிஸ்ட்டில் அமரன் படம் மூலம் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அமரன் படத்தின் அதிரி புதிரியான வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து மூன்று திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்...  கோலிவுட்டில் எனக்கு எதிரா ஒரு கும்பல் இருக்கு; ஹேட்டர்ஸுக்கு SK கொடுத்த தக் லைஃப் ரிப்ளை

34
Aarthi Sivakarthikeyan

இதில் எஸ்.கே.23 திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்கிறார். அதேபோல் அவர் கைவசம் உள்ள மற்றொரு படத்தை டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார். இதுதவிர சிவகார்த்திகேயனின் 25வது படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் ஜெயம் ரவி, ஸ்ரீலீலா, அதர்வா முரளி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

44
Sivakarthikeyan Says About Aarthi

இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சிவகார்த்திகேயன், தான் சினிமாவை விட்டு விலக நினைத்ததாக கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். மூன்று வருடத்திற்கு முன் சினிமாவை விட்டு விலகிவிடலாம் என்கிற முடிவுக்கு வந்தாராம் சிவகார்த்திகேயன், அப்போது அவரது மனைவி ஆர்த்தி தான், அஜித் மற்றும் விக்ரமிற்கு அடுத்து கடந்த 20 ஆண்டுகளில் சினிமா பின்புலம் இல்லாமல் வந்து சாதித்த பிரபலங்கள் யாரும் இல்லை. நீங்கள் அதை செய்திருக்கிறீர்கள். அது சாதாரண விஷயம் இல்ல. அதனால் இதை விட்றாதீங்க. உங்களுக்கு கிடைத்த புகழை கொண்டாடுங்க என சொல்லி ஊக்கமளித்திருக்கிறார். அவர் சொன்ன வார்த்தைகளால் தான் சினிமாவை விட்டு விலகும் முடிவை கைவிட்டாராம் எஸ்.கே.

இதையும் படியுங்கள்...  தனுஷுக்கு போட்டியாக பாலிவுட்டில் எண்ட்ரியாகும் சிவகார்த்திகேயன் - முதல் படமே இவருடனா?

Read more Photos on
click me!

Recommended Stories