தளபதி 69-ல் நடிக்கும் தனுஷின் ‘மகன்’ - அவருக்கு ஜோடி இந்த டிரெண்டிங் ஹீரோயினா?

First Published | Jan 8, 2025, 10:29 AM IST

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 69 திரைப்படத்தில் நடிகர் தனுஷின் ரீல் மகனும் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

Thalapathy 69

கோட் படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தளபதி 69. இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தை கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அரசியல் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக பாபி தியோலும் நடிக்கின்றனர். மேலும் மலையாள நடிகை மமிதா பைஜுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Thalapathy 69 Movie Team

தளபதி 69 திரைப்படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில் இப்படம் தான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும். இப்படத்தை முடித்ததும் தீவிர அரசியலில் இறங்க உள்ளார் விஜய். இதற்காக தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி உள்ள அவர், வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட திட்டமிட்டுள்ளார். நடிகர் விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதையும் படியுங்கள்... விஜய்க்கே இந்த நிலைமையா? ஓடிடியில் விலை போகாத தளபதி 69; காரணம் என்ன?

Tap to resize

Dhanush, Teejay

தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தளபதி 69 படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் டீஜே அருணாச்சலமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளது தெரியவந்திருக்கிறது. இவர் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் நடிகர் தனுஷின் மகனாக நடித்து அசத்தி இருந்தார். அதைத்தொடர்ந்து சிம்பு உடன் பத்து தல படத்தில் நடித்த டீஜே தற்போது தளபதி 69-ல் இணைந்திருக்கிறார்.

Vijay, Mamitha Baiju

இப்படத்தில் நடிகை மமிதா பைஜுவுக்கு ஜோடியாக டீஜே நடித்து வருகிறாராம். விஜய் சாரின் கடைசி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் யாரு தான் வேண்டாம் என சொல்வார்கள். அதனால் ஓகே சொன்னேன் என கூறியுள்ள டீஜே, தான் சிறுவயதில் இருந்தே விஜய்யின் படங்களை பார்த்து வளர்ந்ததாகவும், தற்போது அவருடனே நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது கனவு போல் உள்ளதாக கூறி உள்ளார். நடிகர் டீஜே சுயாதீன இசைக்கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... கோலிவுட்டின் 1000 கோடி வசூல் கனவை நனவாக்குமா 2025? தமிழ் படங்களின் லைன் அப் இதோ

Latest Videos

click me!