
கேஜிஎப் படம் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் யாஷ். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் நவீன் குமார். சினிமாவுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தபோது இவரை யஷ்வந்த் என அழைத்து வந்தனர். அந்த பெயரை சுருக்கி யாஷ் என வைத்துக்கொண்டார். கடந்த 2004-ம் ஆண்டு கன்னட சீரியலில் நடிக்க தொடங்கிய யாஷ், பின்னர் படிப்படியாக சினிமாவுக்குள் நுழைந்தார். இவர் அதிகளவில் தமிழ் படங்களின் கன்னட ரீமேக்கில் நடித்து வெற்றி கண்டார். குறிப்பாக களவானி, சுந்தரபாண்டியன் போன்ற படங்களின் கன்னட ரீமேக்கில் யாஷ் தான் ஹீரோவாக நடித்தார்.
பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் படம் தான் நடிகர் யாஷின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது. இப்படம் பான் இந்தியா அளவில் ஹிட் ஆனதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தையும் எடுத்தனர். முதல் பாகத்தை விட மிக பிரம்மாண்டமாக உருவான கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1200 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. இப்படத்தின் மூலம் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆகவும் உருவெடுத்தார் யாஷ். விரைவில் கேஜிஎப் மூன்றாம் பாகமும் உருவாக உள்ளது.
கேஜிஎப் படத்தின் வெற்றிக்கு பின்னர் 2 ஆண்டுகள் யாஷ் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த நிலையில், தற்போது டாக்ஸிக் என்கிற திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகி உள்ளார். இப்படத்தை கீத்து மோகன் தாஸ் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் யாஷுடன் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் நடித்து வருகிறார். இதில் யாஷுக்கு அக்காவாக நயன்தாரா நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதிலும் கேங்ஸ்டராக நடிக்கிறார் யாஷ்.
இதையும் படியுங்கள்... கமல் கிடையாது.. சஞ்சய் தத் கிடையாது.. இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் வில்லன் நடிகர் இவர்தான்..
இதுதவிர பாலிவுட்டில் உருவாகும் இராமாயணம் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் யாஷ். இதில் ராமனாக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க, அவருக்கு ஜோடியாக சீதா கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் யாஷ், வில்லன் ராவணனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக நடிகர் யாஷ் ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளாராம். இதன்மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் வில்லன் நடிகராக உருவெடுத்துள்ளார் யாஷ்.
இந்நிலையில், நடிகர் யாஷ் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளிவந்துள்ளது. அதன்படி அவரின் சொத்து மதிப்பு ரூ.53 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதுவே அடுத்த ஆண்டு 300 கோடிக்கு மேல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர் நடித்து வரும் டாக்ஸிக் படத்திற்காக 80 கோடியும், இராமாயணம் படத்துக்காக 200 கோடியும் சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. இதனால் ஒரே ஆண்டில் அவரது சொத்து மதிப்பும் மளமளவென அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
நடிகர் யாஷுக்கு சொந்தமாக பெங்களூருவில் ஆடம்பர பங்களா உள்ளது. இதுதவிர இவரிடம் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ், ஆடி க்யூ 7, பிஎம்டபிள்யூ 520டி, பஜேரோ ஸ்போர்ட் போன்ற சொகுசு கார்கள் உள்ளன. இவர் நடிகை ராதிகா பண்டிட் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு அய்ரா என்கிற மகளும், ஆயுஷ் என்கிற மகனும் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... சினிமாவின் டிரெண்டையே மாற்றிய கேஜிஎஃப், புஷ்பா படங்கள்: எப்படி, ஏன் ஹீரோக்கள் கடத்தல் வேலை செய்றாங்க?