மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகிய நிலையில், அப்படத்தின் புது ரிலீஸ் தேதி கசிந்துள்ளது.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி இருக்கிறார். இப்படத்தில் அஜித் உடன் திரிஷா, ரெஜினா கசெண்ட்ரா, அர்ஜுன், ஆரவ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது. இது பிரேக் டவுன் என்கிற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்டு உள்ளது.
24
Ajith, Trisha
விடாமுயற்சி திரைப்படம் முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் இப்படத்தின் ரீமேக் உரிமை தொடர்பாக சிக்கல் ஏற்பட்டதால் வேறுவழியின்றி பொங்கல் ரேஸில் இருந்து விடாமுயற்சி திரைப்படம் விலகியது. இதனால் இப்படத்திற்கு பதிலாக அரை டஜன் படங்கள் பொங்கல் ரேஸில் குதித்துள்ளன.
விடாமுயற்சி பொங்கல் ரேஸில் இருந்து விலகியதால் அஜித் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்களை கூல் டவுன் செய்யும் விதமாக வருகிற பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி படத்தின் டிரைலர் வெளியிடப்பட வாய்ப்புள்ளது. அத்துடன் விடாமுயற்சி படத்தின் புது ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி விடாமுயற்சி திரைப்படம் இந்த மாத இறுதியில்... அதாவது ஜனவரி 30ந் தேதி திரைக்கு வர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
44
vidaamuyarchi New Release Date
பொங்கல் ரிலீஸ் படங்கள் குறைந்தது 10 நாட்களாவது திரையரங்குகளை ஆக்கிரமித்துவிடும் என்பதால் ஜனவரி 26ந் தேதி ரிலீஸ் செய்யாமல் விடாமுயற்சி படத்தை ஜனவரி 30ந் தேதி திரைக்கு கொண்டு வரும் ஐடியாவில் உள்ளதாம் படக்குழு. விரைவில் விடாமுயற்சி படத்தின் புது ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் அஜித்தின் மற்றொரு படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10ந் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.