கடையில் பொட்டலம் போடுறான்; அவனுக்கு நிச்சயமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் அண்ணன்கள் வைத்த டுவிஸ்ட்!

First Published | Jan 7, 2025, 11:41 PM IST

Palanivel Engagement Stopped in Pandian Stores 2 : கடையில் பொட்டலம் மடிக்கும் வேலையை பார்க்கிறான், சம்பளம் கூட கிடையாது, அவனுக்கு எப்படி கல்யாணம் நடக்கலாம் என்று அண்ணன்கள் வைத்த டுவிஸ்ட்டால் தம்பி பழனிவேல் நிச்சயம் நின்றுவிட்டது.

Pandian Stores 2, Palanivel Engagement

Palanivel Engagement Stopped in Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனிவேல் நிச்சயதார்த்தம் நடக்குமா? நடக்காதா என்று ரசிகர்கள் ஒன்று மொத்தமாக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நிச்சயதார்த்தத்திற்கு ஒட்டு மொத்தமாக பாண்டியனின் குடும்பத்தினருக்கு நிச்சயம் ஏற்பாடு செய்த கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதில் சற்று ஆச்சரியம் அளிக்கும் வகையில் பழனிவேலின் அம்மா காந்திமதியும், அவரது அண்ணிகளான வடிவு (காயத்ரி பிரியா), மாரி (மாதவி) ஆகியோரும் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு புறப்பட்டு வந்தனர்.

Palanivel Engagement

நீண்ட நேரமாக பாண்டியன், கோமதி, பழனிவேல், சரவணன், கதிர், ராஜி, மீனா என்று மாப்பிள்ளை வீட்டார் அனைவருமே காத்துக் கொண்டிருக்க பெண் வீட்டார் யாருமே கோயிலுக்கு வரவில்லை. இதையடுத்து பெண் வீட்டார் சார்பில் ஒருவர் வந்தார். அவர் வந்ததும் எங்களுக்கு இந்த நிச்சயதத்தில் விருப்பமில்லை என்றார்.

Tap to resize

Palanivel Engagement Stopped

இது குறித்து மேற்கொண்ட அறிந்து கொள்ள மீனா, சரவணன், செந்தில் மற்றும் மயில் அனைவரும் பெண் வீட்டார் வீட்டிற்கு சென்றனர். அங்கு எங்களுக்கு இந்த நிச்சயத்தில் விருப்பம் இல்லை விருப்பம் இல்லை என்றே பெண்ணின் பெற்றோர் கூறியிருந்தனர். கடைசியில் மாப்பிள்ளை மளிகை கடையில் பொட்டலம் மடிக்கிறார், சம்பளம் கிடையாது என்றெல்லாம் மாப்பிள்ளையோட அண்ணன்கள் போட்டுக் கொடுத்த உண்மை தெரிய வருகிறது.

Pandian Stores 2

மீனாவோ எங்களுக்கு ஏற்கனவே குடும்ப பிரச்சனை இருக்கு என்று எடுத்துச் சொல்லியும் பெண் வீட்டார் கேட்பதாக தெரியவில்லை. அப்படியே இந்த எபிசோடும் முடிகிறது. நாளை நடக்கும் எபிசோடில் இந்த உண்மை தெரிந்த பிறகு பாண்டியனின் ரியாக்‌ஷன், பழனிவேலின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும் என்பது தான்.

Latest Videos

click me!