கழுத்தில் புது தாலி! மாடர்ன் ட்ரெஸில் மிடுக்காக போஸ் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்!

Published : Jan 07, 2025, 07:14 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷ், கருப்பு நிற மாடர்ன் ட்ரெஸ் அணிந்து... கழுத்தில் புதிய தாலியுடன் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
14
கழுத்தில் புது தாலி! மாடர்ன் ட்ரெஸில் மிடுக்காக போஸ் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்!
Keerthy Suresh Hot Photos

தென்னிந்திய நடிகையான கீர்த்தி சுரேஷ், கடந்த மாதம் தன்னுடைய நீண்ட நாள் காதலரான, ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார். சுமார் 15 வருடங்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், ஆரம்பத்தில் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கீர்த்தியின் பெற்றோர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் பலகட்ட போராட்டங்களுக்கு பின்னரே கீர்த்தி சுரேஷ், பெற்றோரின் அனுமதி பெற்று பின்னர் வெற்றிகரமாக தன்னுடைய காதலரை கரம் பிடித்துள்ளார்.

24
Keerthy Suresh wed Long Time Friend Antony Thattil

கீர்த்தி சுரேஷின் திருமணம் கோவாவில் நடந்த நிலையில், இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தியுள்ளனர். குறிப்பாக தளபதி விஜய் கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் திருமணத்தில் நேரடியாக கலந்து கொண்டார். அதே போல் த்ரிஷ், மாளவிகா மோகனன், இயக்குனர் மாறி செல்வராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கீர்த்தியின் குடும்ப வழக்கப்படி இந்து முறைப்படியும், ஆண்டனி தட்டில் குடும்ப வழக்கப்படி கிருஸ்தவ முறைப்படியும் இவர்களுக்கு திருமணம் நடந்தது.

தூள் தூளாக நொறுக்கிய ரேஸ் கார்! விபத்தில் சிக்கிய அஜித்துக்கு என்ன ஆச்சு? கதறும் ரசிகர்கள்!

34
Keerthy suresh Dubai Dairies

திருமணம் முடிந்த கையேடு, கீர்த்தி சுரேஷ் பாலிவுட் திரையுலகில் அறிமுகமான 'பேபி' ஜான் திரைப்படத்தின் புரமோஷன் பணிகளில் கலந்து கொண்டார். துபாய்க்கு புரமோஷன் பணிக்காக சென்றபோது, கீர்த்தி சுரேஷ் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தான் இப்போது சமூக வலைத்தளத்தில் கீர்த்தி சுரேஷ் பகிர்ந்து கொண்டுள்ளார். கருப்பு நிற குட்டை கவுன் அணிந்து, புதிய தாலியுடன் மிகவும் கியூட்டாக உள்ளார் கீர்த்தி சுரேஷ். 

44
Keerthy Suresh Honey Moon Celebration

தன்னுடைய திரைப்படங்களின் பணிகளை வெற்றிகரமாக முடித்து விட்ட, கீர்த்தி சுரேஷ் கணவரோடு தாய்லாந்தில் ஹனி மூன் கொண்டாட்டத்தில் உள்ளார். சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலானது. இதை தொடர்ந்து தற்போது துபாய் நினைவுகளை அசைபோடும் விதமாக இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் கீர்த்தி சுரேஷ் திரையுலகை விட்டு விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இதுவரை அதிகார பூர்வமாக கீர்த்தி சுரேஷ் எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் 'கோட்' படத்தில் நடிச்சுருக்கவே கூடாது; மன அழுத்தத்திற்கு ஆளானேன்! மீனாட்சி சவுத்ரி ஓப்பன் டாக்!

Read more Photos on
click me!

Recommended Stories