இயக்குநர் அகில் பால் இயக்கத்தில் டோவினோ தாமஸ், த்ரிஷா, வினய் ராய், அஜூ வர்கீஸ், மந்திரா பேடி, அர்ச்சனா கவி, ஷம்மி திலகன், ஆர்யா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். பெண்களுக்கு எதிராக நடக்கும் சம்பங்களை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பின் மூலமாக 2025 ஆம் ஆண்டு வெற்றியோடு தொடங்கிய த்ர்ஷா இப்போது இந்த ஆண்டில் மட்டும் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, விஸ்வம்பரா, தக் லைஃப், சூர்யா 45 மற்றும் ராம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்கள் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது.