அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் ரூ.1800 கோடி வசூலித்து இருந்தாலும் தமிழ்நாட்டில் படுதோல்வியை சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அல்லு அர்ஜுன் நடித்திருக்கும் புஷ்பா 2 திரைப்படம் வசூல் மழையைப் பொழிந்து வருவது அனைவருக்கும் அறிந்ததே. இந்தியத் திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படங்களில் தங்கல், பாகுபலி 2 ஆகியவை முன்னிலையில் இருந்தன. தற்போது புஷ்பா 2 பாகுபலி 2 சாதனையை முறியடித்துள்ளது. அப்படம் தற்போது வரை ரூ.1831 கோடி வசூலித்து, பாகுபலி 2 திரைப்படத்தின் 1810 கோடி ரூபாய் சாதனையை முறியடித்துள்ளது. இதனால் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களில் புஷ்பா 2 இரண்டாவது இடத்தில் உள்ளது. சுமார் ரூ.2000 கோடியுடன் தங்கல் முதலிடத்தில் உள்ளது.
24
Allu Arjun, Pushpa 2
உலகம் முழுவதும் வசூல் மழை பொழிந்தாலும் இரு மாநிலங்களில் மட்டும் புஷ்பா 2 திரைப்படம் தோல்வியடைந்துள்ளது. அதன்படி புஷ்பா 2 வில்லன் பகத் பாசிலின் சொந்த மாநிலமான கேரளாவில் ஏற்கனவே இப்படம் தோல்விப் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு மூலம் கொடுத்த பணத்தைக்கூட அங்கு புஷ்பா 2-வால் திரும்பப் பெற முடியவில்லை. தெலுங்கிலும் சாதாரணமாகவே ஓடுகிறது. தெலங்கானாவில் ஓரளவு லாபம் பார்த்தாலும், ஆந்திராவில் நஷ்டத்தில் உள்ளது.
கேரளாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் புஷ்பா 2 தோல்விப் படமாக மாறி உள்ளது. இந்தத் திரைப்படம் பிரேக் ஈவன் செய்யவே 110 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டியிருந்தது. ஆனால் இதுவரை 70 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. இதன் அடிப்படையில் 40 கோடி ரூபாய் நஷ்டத்தில் உள்ளது என்று தெரியவந்துள்ளது. இந்தத் தகவலைப் பிரபல சினிமா விமர்சகரான மனோபாலா விஜயபாலன் தெரிவித்துள்ளார். இது புஷ்பா 2 படக்குழுவ்சை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
44
Pushpa 2 Box Office
புஷ்பா 2 வட இந்தியாவில் மட்டுமே மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அங்கு 800 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அங்கு அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. வெளிநாடுகளிலும் ஓரளவு நன்றாகவே ஓடியுள்ளது. ஆனால் வட அமெரிக்காவில் இன்னும் லாபம் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
புஷ்பா 2-வை பொறுத்தவரை வசூல் விஷயத்திலும், சர்ச்சைகள் விஷயத்திலும் தயாரிப்பாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என்று கூறலாம். ரஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ள இந்தத் திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர். இதில் ஃபஹத் ஃபாசில், சுனில், அனசுயா, ஜெகபதி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டிசம்பர் 5 அன்று இந்தத் திரைப்படம் வெளியானது.