போதை பொருள் வழக்கு; மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்!

First Published | Jan 7, 2025, 3:03 PM IST

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட, பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 

Actor Mansoor Ali Khan

தமிழ் சினிமாவில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமானவர் மன்சூர் அலிகான். அரசியல் கட்சி ஒன்றை துவங்கி, தன்னைஅரசியல் பணிகளிலும்  ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இவர் பல்வேறு சமூக பிரச்சனைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர் என்பது  நாம் அறிந்ததே.
 

Masoor Alikhan Son Arrested Drug Case

இந்நிலையில், முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்களை விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களின் செல்போனை வாங்கி சோதனை செய்தபோது, அதில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் பெயர் இருந்தது. பின்னர் அவருக்கும் இந்த போதைப்பொருள் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்த நிலையில், கடந்த மாதம் டிசம்பர் 4-ஆம் தேதி துக்ளக் கைது செய்யப்பட்டார்.

விஜய்க்கே இந்த நிலைமையா? ஓடிடியில் விலை போகாத தளபதி 69; காரணம் என்ன?
 

Tap to resize

Court Gives Conditional Bail

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது நடிகர் மன்சூர் அலிகான் போதை பொருள் பயன்படுத்துவது தவறு என்பது உனக்கு தெரியாதா? ஏன் இப்படியெல்லாம் செய்கிறாய் என அறிவுரை கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 
 

Mansoor Ali Khan Son Thuklak

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், துக்ளக் போதை பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக துக்ளத்துக்கு ஜாமீன் பெற கடந்த மாதம் மனு தாக்கல் செய்த நிலையில், போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு நீதிமன்றம் இதனை தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்து செய்யப்பட்ட நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஏடி ஜெகதீஷ் சந்திரா, அலிகான் துக்ளக்கிடம்  இருந்து எந்த ஒரு போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும், மற்ற குற்றவாளிகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடைப்படையில் தான் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் போதை பொருள் வைத்திருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாததால், நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

'நந்தா' படத்தில் சூர்யாவுக்கு முன் ஹீரோவாக நடிக்க இருந்தது டாப் ஹீரோ யார் தெரியுமா?

Latest Videos

click me!