விஜய்யின் 'கோட்' படத்தில் நடிச்சுருக்கவே கூடாது; மன அழுத்தத்திற்கு ஆளானேன்! மீனாட்சி சவுத்ரி ஓப்பன் டாக்!

First Published | Jan 7, 2025, 4:18 PM IST

பிரபல இளம் நடிகையான மீனாட்சி சவுத்ரி, தளபதி விஜயுடன், கோட் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு என்றும், இதனால் மன அழுத்தத்திற்கு ஆளானதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
 

Meenakshi Chaudhary is a Model

தென்னிந்திய திரையுலகில் இளம் நடிகையாக அறியப்படும் மீனாட்சி சவுத்ரி, ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். இளம் வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்த இவர் ஃபெமினா மிஸ் இந்தியா 2018 போட்டியில்  கலந்து கொண்டு முதல் ரன்னரப்பாக மாறினார். அதேபோல் மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2018 நிகழ்ச்சிகளும் கலந்துகொண்டு முதல் ரன்னரப்பாக இருந்தார்.
 

Meenakshi Chaudhary is A Dental Surgeon

மாடலிங் துறையில் மட்டுமின்றி ஒரு டென்டல் சர்ஜனான இவர், தற்போது தொடர்ந்து தரமான திரைப்படங்களை தேர்வு செய்து நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு 'அப்ஸ்டார்' என்கிற ஹிந்தி படத்தின் மூலம் இவர் அறிமுகமாகி இருந்தாலும், இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளை கொடுத்தது தென்னிந்திய திரையுலகம் தான். தெலுங்கில் இவர் நடித்த கில்லாடி, ஹிட்: செகண்ட் கிளாஸ், போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

போதை பொருள் வழக்கு; மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்!
 

Tap to resize

Meenakshi Chaudhary Tamil movies

இதைத்தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'கொலை' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். மேலும் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜிக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். அந்த வரிசையில் தான் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான, 'கோட்'திரைப்படத்தில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில், தான் செய்த மிகப்பெரிய தவறு 'கோட்' படத்தில் நடித்தது தான் என்றும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 

Meenakshi Chaudhary Shocking Statement

இதுகுறித்து இவர் கூறுகையில், 'கோட்'  படத்தில் என்னுடைய காட்சிகள் மிகவும் குறைவு. அதேபோல் ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே என்னை பயன்படுத்தினார்கள். இதனால் பலர் என்னுடைய கதாபாத்திரம் இந்த படத்திற்கு தேவையே இல்லை என்பது போல் கிண்டலும் - கேலியும் செய்தனர். என்னை மையப்படுத்தி பல ட்ரோல் வெளியானது இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானேன். எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லாத ஒரு படத்தில் நடிக்க கூடாது என்பதையும் புரிந்து கொண்டேன். என பேசியுள்ளார். 

விஜய்க்கே இந்த நிலைமையா? ஓடிடியில் விலை போகாத தளபதி 69; காரணம் என்ன?
 

Lucky Baskar

அதே நேரம் தெலுங்கில் தன்னுடைய நடிப்பில் வெளியான 'லக்கி பாஸ்கர்' திரைப்படத்திற்கு தொடர்ந்து பல பாசிட்டிவ் விமர்சனங்கள் மற்றும் பாராட்டுக்கள் கிடைத்ததாக கூறியிருந்தார். லக்கி பாஸ்கர் திரைப்படத்தில், துல்கர் சல்மானுக்கு ஜோடியாகவும், 6 வயது குழந்தையின் அம்மாவாகவும் மீனாட்சி சவுத்ரி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

Meenakshi Chaudhary About Goat

பல நடிகைகள் தளபதி விஜயுடன் இணைந்து  ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என நினைக்கும் நிலையில், மீனாட்சியின் பேச்சு தளபதி ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்த இந்த கோட் படத்தில், தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகாவும், மகன் விஜய்த்து ஜோடியாக மீனாட்சியும் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட ஒரு சைக்கோவை போல் தான் மகன் விஜய் (ஜீவன்) கதாபாத்திரத்தை வெங்கட் பிரபு காட்சி படுத்தியிருந்தார். இவர்களை தவிர பிரசாந்த், லைலா, அஜ்மல், பிரபுதேவா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

'நந்தா' படத்தில் சூர்யாவுக்கு முன் ஹீரோவாக நடிக்க இருந்தது டாப் ஹீரோ யார் தெரியுமா?

Latest Videos

click me!