சூர்யா 45 படத்துக்காக ஆர்.ஜே.பாலாஜி பொத்தி பொத்தி பாதுகாத்த டைட்டில் லீக் ஆனது!

Published : Jan 08, 2025, 07:41 AM IST

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து வரும் சூர்யா 45 படத்திற்கு வைக்கப்பட்டுள்ள டைட்டில் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

PREV
14
சூர்யா 45 படத்துக்காக ஆர்.ஜே.பாலாஜி பொத்தி பொத்தி பாதுகாத்த டைட்டில் லீக் ஆனது!
suriya 45

கங்குவா படத்தின் தோல்விக்கு பின் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நடிகர் சூர்யா, அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படம் ரெட்ரோ. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யாவின் 44வது படமான இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்திருக்கிறார். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற மே மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

24
Suriya

இதுதவிர நடிகர் சூர்யா கைவசம் உள்ள மற்றொரு படம் சூர்யா 45. இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இதற்கு முன்னர் மெளனம் பேசியதே, ஆறு போன்ற படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த இவர்கள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்திற்கு முதலில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதாக இருந்தது, பின்னர் அவர் விலகியதால் அவருக்கு பதில் சாய் அபயங்கர் இசையமைப்பாளராக கமிட்டாகி உள்ளார்.

இதையும் படியுங்கள்... 'நந்தா' படத்தில் சூர்யாவுக்கு முன் ஹீரோவாக நடிக்க இருந்தது டாப் ஹீரோ யார் தெரியுமா?

34
Suriya 45 Movie Poster

சூர்யா 45 படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு வில்லனாக ஆர்.ஜே.பாலாஜி நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கி பின்னர் கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டைட்டில் முடிவு செய்யப்பட்டாலும் அதை அறிவிக்காமல் சீக்ரெட்டாகவே வைத்திருந்தனர். இந்நிலையில் சூர்யா 45 திரைப்படத்தின் டைட்டில் லீக் ஆகி உள்ளது.

44
Suriya 45 Movie Title Leaked

அதன்படி சூர்யா 45 திரைப்படத்திற்கு ‘பேட்டைக்காரன்’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மாஸான டைட்டிலை ஆர்.ஜே.பாலாஜி பொத்தி பொத்தி பாதுகாத்து வந்த நிலையில், அது லீக் ஆகி உள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. அநேகமாக வருகிற பொங்கல் பண்டிகைக்கு சூர்யா 45 படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அந்த அறிவிப்பு வெளிவர உள்ளதாம்.

இதையும் படியுங்கள்... அட்ராசக்க; அதிரடியாக ஆஸ்கர் ரேஸில் நுழைந்த சூர்யாவின் கங்குவா!

Read more Photos on
click me!

Recommended Stories