ரிஜக்ட் செய்த பாரதிராஜாவையே தேடி வர செய்த காந்த கண்ணழகி சில்க் ஸ்மிதா – எந்த படமுன்னு தெரியுமா?

Published : Jan 08, 2025, 10:09 AM IST

Reason for Bharathiraja Reject Silk Smitha in his Movie : தன்னை வேண்டாம் என்று மறுத்த இயக்குநர் பாரதிராஜாவையே தன் பின்னாள் வரச் செய்த நடிகை என்றால் அது சில்க் ஸ்மிதா தான். அதைப் பற்றி முழுவதுமாக பார்க்கலாம்.

PREV
15
ரிஜக்ட் செய்த பாரதிராஜாவையே தேடி வர செய்த காந்த கண்ணழகி சில்க் ஸ்மிதா – எந்த படமுன்னு தெரியுமா?
Bharathiraja and Silk Smitha Movies

Reason for Bharathiraja Reject Silk Smitha in his Movie : 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ் யாரும் சில்க் ஸ்மிதாவை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். அவரது நடிப்பு, கிளாமர், ரொமான்ஸ், டான்ஸ் என்று எல்லாவற்றிலும் இளசுகளின் இதயங்களை கொள்ளையடித்து தனக்கென்று ரசிகர்களை உருவாக்கிக் கொண்டவர். ஹீரோக்களுக்கு இருக்கும் அதே வரவேற்பு அப்போது சில்க் ஸ்மிதாவிற்கும் இருந்தது. வண்டிச்சக்கரம் தான் அவரது முதல் படமாக இருந்தாலும் கூட அவர் அதற்கு முன்னதாகவே இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் நடிக்க வேண்டியது.

25
Director Bharathiraja Filmography

விஜயலட்சுமி என்பரை சில்க் ஸ்மிதாவாக மாற்றியது வினு சக்ரவர்த்தி தயாரித்த வண்டிச்சக்கரம் என்ற படம் தான். என்னதான் கவர்ச்சியாக அறிமுகமானாலும் அவருக்கு குணச்சித்திர நடிகை என்ற அந்தஸ்தை கொடுத்தது கார்த்திக் மற்றும் ராதா நடித்த அலைகள் ஓய்வதில்லை என்ற படம் தான். இது அவரது 2ஆவது படம். இந்தப் படம் கொடுத்த வரவேற்பு இதே போன்று ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தினார்.

35
Silk Smitha Tamil Movies

எனினும் அதைவிட கவர்ச்சி காட்சிகளிலும், டான்ஸராகவும் தான் ஏராளமான படங்களில் நடித்திருந்தார். குறுகிய காலத்திலேயே சில்க் ஸ்மிதா சினிமாவில் வளர்ச்சி அடைய முன்னணி இயக்குநர்கள் படங்களில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டினர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று எல்லா மொழிகளிலும் கலக்கினார். வண்டிச்சக்கரம் இவரது முதல் படமாக இருந்தாலும் பாராதிராஜா தான் இவரை அறிமுகம் செய்ய இருந்தார்.

45
Alaigal Oivathillai Tamil Movie

பாரதிராஜா அறிமுகம் செய்ய இருந்த படம் புதிய வார்ப்புகள். இந்தப் படத்திற்கு பூ விற்கும் பெண் ரோலுக்காக சில்க் ஸ்மிதாவை பாரதிராஜா தேர்வு செய்து போட்டோஷூட்டும் எடுத்திருக்கிறார். அதன் பிறகு சிறு வயது பெண் போன்று தெரியவே வேண்டாம் என்று ரிஜக்ட் செய்திருக்கிறார். இந்தப் படத்திற்கு மட்டுமே மறுத்த பாரதிராஜா, அவரது கண் கவர்ச்சியாக இருக்கிறது. காந்தம் போன்று இருக்கிறது என்று வர்ணித்துள்ளார்.

55
Vandichakkaram Tamil Movie

இதையடுத்து தான் தன்னுடைய அலைகள் ஓய்வதில்லை படத்திற்காக சில்க் ஸ்மிதாவை தேடி அலைந்துள்ளார். வேறு வழியில்லாமல் மணிவண்ணன் மற்றும் மனோபாலாவிடம் சொல்லி சில்க் ஸ்மிதாவை அழைத்து வரச் சொல்லியிருக்கிறார். கடைசியில் பாரதிராஜாவும் அலைகள் ஓய்வதில்லை படத்தில் சில்க் ஸ்மிதாவை நடிக்க வைத்து அழகு பார்த்திருக்கிறார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories