
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக அறியப்படுபவர் விஷால். 1989 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கிய விஷால், இதைத்தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு இயக்குனர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான 'செல்லமே' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். துணை இயக்குனராக பணியாற்றி வந்த போது விஷாலுக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
முதல் படத்தில் இவருடைய நிறத்தின் காரணமாக அதிக விமர்சனங்களுக்கு ஆளானாலும், விஷாலுக்கு முதல் படமே ஹிட் கொடுத்தது. இதைத் தொடர்ந்து இவர் நடித்த சண்டைக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்தியம், போன்ற படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றன. வளர்ந்து வரும் ஹீரோக்கள் பட்டியலில் இருந்து மிக விரைவாகவே முன்னணி ஹீரோவாக மாறினார். பின்னர் அதிரடி கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து அசத்தி வந்த விஷால், இயக்குனர் பாலா இயக்கத்தில் 'அவன் இவன்' படத்தில் தன்னுடைய தோற்றத்தை மாற்றி நடித்தது இவருக்குள் இருக்கும் முழு திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்தது.
உண்மையான உணர்வு; காதலை காமெடியாக்கிய விஷால்? காத்திருக்கும் சம்பவம் தர்ஷிகா போட்ட பதிவு!
இந்நிலையில் விஷால் நடிப்பில் 12 வருடங்களுக்கு பின் வெளியாக உள்ள, 'மத கஜ ராஜா' திரைப்படத்தின் பிரஸ்மீட்டில் சமீபத்தில் கலந்து கொண்ட விஷாலை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மிகவும் ஒல்லியாக மாறி, முகம் வீங்கி, கைகள் நடுக்கத்துடன் வந்தார். விஷாலை பத்திரமாக இருக்கையில் அமர வைத்தது கூட நடிகர் மற்றும் இப்படத்தின் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தான். விஷாலின் இந்த நிலைமைக்கு காரணம், இயக்குனர் பாலா தான் என வலைபேச்சு பிஸ்மி உள்ளிட்ட சில திரைப்பட விமர்சகர்கள் குற்றம்சாட்டனர்.
இப்படத்திற்காக விஷாலுக்கு மாறுகண் வேண்டும் என சில மருத்துவ சிகிச்சைகள் மூலம் அவரின் கண்கள் இழுத்து தைக்கப்பட்டதாக கூறினார். படம் முடிந்த பின்னர், அவரின் பார்வை சரிசெய்ய பட்டாலும், இதன் விளைவே விஷாலுக்கு தீவிர ஒற்றை தலைவலி ஏற்பட்டது. அதில் இருந்து விடுபட சிகிச்சைகள் எதுவும் பலன் தராததால், விஷால் சில கெட்ட பழக்கங்களுக்கு அடிமையானதாகவும், இதன் விளைவே விஷால் இன்று இந்த நிலையில் இருக்கிறார் என கூறியிருந்தார்.
ஆனால் விஷால் தரப்பில் இருந்து இது போன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஷால் தீவிர வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்காக முழு பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என அப்பல்லோ மருத்துவர் கைப்பட எழுதிய ஒரு அறிக்கை வெளியானது. விஷால் தற்போது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஒரு தகவல் பரவிய நிலையில், இதற்கு விஷாலின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் விளக்கம் கொடுத்துள்ளார்.
விவாகரத்தான அந்த நடிகையை தான் ரொம்ப பிடிக்கும்; ஷாக் கொடுத்த ராம் சரண்!
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது... "நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் முற்றிலும் வதந்தி. மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் வீட்டில் இருந்து ஓய்வெடுத்து வருகிறார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூட காய்ச்சல் வந்த காரணத்தால் உடல் நடுக்கம் மற்றும் சற்று சோர்வாக காணப்பட்டார். அவர் பூரண நலமுடன் இருக்கிறார். ஓரிரு நாட்களில் முழுமையாக குணமாகி விடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விஷாலின் ரசிகர்கள் அவர் பூரண குணமடைய வேண்டும் என, பல இடங்களில் அர்ச்சனை, பூஜைகள், அன்னதானங்கள், போன்றவற்றை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.