இனி சரக்கு அடிச்ச செருப்பால அடிப்பேன்... ஒரே நாளில் குடிப்பழக்கத்தை கைவிட்ட ரஜினி - காரணம் யார் தெரியுமா?

First Published | Aug 26, 2024, 9:25 AM IST

மது அருந்தும் பழக்கத்தை கைவிட்டது எப்படி என்பது பற்றி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பழைய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார் அதைப்பற்றி பார்க்கலாம்.

Rajinikanth

பெங்களூருவில் பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வந்த ரஜினிகாந்த், கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அவர் ஆரம்ப காலகட்டத்தில் மதுவுக்கு அடிமையாக இருந்தார். அதுமட்டுமின்றி சிகரெட் பழக்கமும் ரஜினிக்கு அதிகம் இருந்தது. அதில் மதுப்பழக்கத்தை கைவிட்டது ஏன் என்பது பற்றி ரஜினிகாந்தே பழைய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

Superstar Rajinikanth

அவர் கூறியதாவது : “அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்தபோது நடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டேன். அப்போது நாகேஷ் என்னை அழைத்து, சிவாஜி ராவ் நடிப்பு ஒன்னும் பெரிசு இல்ல. பாலச்சந்தர் என்ன செய்கிறாரோ அதைமட்டும் செய்துவிடுங்கள். இத்தனை வருஷமா நானே அப்படி தான் நடிச்சிட்டு இருக்கேன் என சொன்னார். அவர் சொன்னபடி செய்தேன், அதற்குபின் நடிப்பு ரொம்ப ஈஸியா இருந்தது. பாலச்சந்தருடைய முதல் சிஷ்யன் நாகேஷ் தான்.

Tap to resize

Rajinikanth quits Alcohol

அபூர்வ ராகங்கள் தொடர்ந்து பாலச்சந்தர் இயக்கத்தில் தப்பு தாளங்கள் படத்தில் நடித்தேன். அப்படத்தை தமிழ் மற்றும் கன்னடத்தில் இயக்குனர் பாலச்சந்தர் படமாக்கி வந்தார். பெங்களூருவில் படப்பிடிப்பு நடந்தது. அந்த சமயத்தில் நாகேஷ் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தப்பு தாளங்கள் பட ஷூட்டிங்கின் போது ஒரு நாள் எனக்கு 8 மணிக்கே பேக் அப் சொல்லிவிட்டார்கள். 

இதையும் படியுங்கள்... தோழிகளோடு கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய அனிதா விஜயகுமார் - வைரலாகும் போட்டோஸ்

Rajinikanth stopped drinking alcohol

அதன்பின்னர் நான் போய் குளித்துவிட்டு, கொஞ்சம் மது அருந்திக் கொண்டு இருந்தேன். இரவு 10 மணிக்கு பாலச்சந்தர் சாரின் உதவி இயக்குனர் எனக்கு போன் போட்டு, உடனே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருமாறு கூப்பிட்டார். ஒரு காட்சி மட்டும் மிஸ் ஆகிவிட்டது அதை படமாக்க சார் அழைப்பதாக கூறினார். நான் ஆடிப்போய்விட்டேன். ஏனெனில் சரக்கு அடிச்சிருந்தேன்.

Rajinikanth quits drinking alcohol

அதன்பின்னர் குளித்துவிட்டு, பிரஷ் பண்ணி, ஸ்ப்ரே அடிச்சு, மேக்கப் எல்லாம் போட்டு போய் நின்னேன். பாலச்சந்தர் சார் அருகில் வரக்கூடாதுனு நினைச்சுட்டே இருந்தேன். அதுக்குள்ள அவருக்கு உண்மை தெரிஞ்சிருச்சு. ஸ்மெல் கண்டுபிடிச்சுட்டாரு. உடனே என்கூட ரூமுக்கு வானு கூட்டிட்டு போனாரு. எனக்கு ஆடிப்போச்சு. நானும் அவர் ரூமுக்கு போய் உட்கார்ந்தேன்.

why Rajinikanth stopped drinking alcohol

அங்கு அவர், நாகேஷ் தெரியுமா உனக்கு, அவன் எப்பேர்பட்ட நடிகன்னு தெரியுமா... அவன் முன்னால நீ ஒரு எறும்புக்கு கூட சமமில்ல. மது அருந்தி அவனே வாழ்க்கையை வீணாக்கிவிட்டான். இனிமே சரக்கு அடிச்சுட்டு ஷூட்டிங் வந்தது தெரிஞ்சுச்சு, உன்ன செருப்பால அடிப்பேன்னு சொன்னார். அன்னைக்கு குடிக்கிறத விட்டேன். ஏன் அதன்பின் காஷ்மீர், ஜம்முனு குளிர் பிரதேசங்கள் போனாலும் ஒரு சொட்டு மது அருந்தியதில்லை” என ரஜினி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... மாரியின் வேறமாரி சம்பவம்... பாக்ஸ் ஆபிஸில் ரஜினி பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய வாழை

Latest Videos

click me!