மாரியின் வேறமாரி சம்பவம்... பாக்ஸ் ஆபிஸில் ரஜினி பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய வாழை

First Published | Aug 26, 2024, 7:34 AM IST

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் வாழை திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரஜினி பட வசூல் சாதனையை முறியடித்து உள்ளது.

vaazhai

பரியேறும் பெருமாள் என்கிற மாஸ்டர் பீஸ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே பேமஸ் ஆன இவர் அடுத்தடுத்து தனுஷை வைத்து கர்ணன், உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் போன்ற மாஸ் ஹிட் படங்களை இயக்கி கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார். அவர் இயக்கத்தில் தற்போது நான்காவது திரைப்படமாக வெளியாகி இருக்கிறது வாழை. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்.

Mari Selvaraj vaazhai movie

மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து வாழை திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் அவரின் உறவுக்கார சிறுவர்கள் இருவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தை மாரி செல்வராஜின் மனைவி திவ்யா தயாரித்து உள்ளார். அவர் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும்.

இதையும் படியுங்கள்... மௌன ராகம் முதல் ராவணன் வரை - சினிமாவை புரட்டிப்போட்ட மணிரத்னத்தின் டாப் 5 படங்கள்!

Tap to resize

Vaazhai Movie collection

வாழை திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 23-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் வாழை படத்துக்கு மாஸான வரவேற்பு கிடைத்து வருகிறது. முதல் இரண்டு நாட்களில் ரூ.3.65 கோடி வசூலித்திருந்த வாழை திரைப்படம் நேற்று அதிகபட்ச வசூலை வாரிக் குவித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினம் என்பதால் அப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.4 கோடி வசூலித்து உள்ளது.

Vaazhai Movie Beats Lal salaam Box Office Collection

இதன்மூலம் ரஜினி படத்தின் வசூல் சாதனையையும் வாழை திரைப்படம் முறியடித்து உள்ளது. ரஜினி நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த லால் சலாம் திரைப்படம் ரிலீஸ் ஆன மூன்றாவது நாளில் வெறும் ரூ.3 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது. ஆனால் மாரி செல்வராஜின் வாழை திரைப்படம் அதைவிட 1 கோடி கூடுதலாக வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது. இன்று கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை என்பதால் இன்றும் வாழை படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... காதலரை கரம்பிடித்த எமி ஜாக்சன்.. சிம்பிளாக நடந்த திருமணம் - லவ்லி கிளிக்ஸ் இதோ!

Latest Videos

click me!