தமிழ் சினிமாவில் தாதாக்களின் கதைகள் உருவாக முக்கிய காரணமாக அமைந்த திரைப்படம் "நாயகன்" என்றால் அது மிகையல்ல. "காட் பாதர்" என்கின்ற அமெரிக்க திரைப்படத்தை தழுவி, வரதராஜ முதலியார் என்பவருடைய வாழ்க்கை வரலாறை இணைத்து எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். மும்பை வாழ் தமிழர்கள் குறித்து தமிழில் முதல் முறை எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமாகவும் இது கருதப்படுகிறது. உலகநாயகன் கமல்ஹாசன், நடிகை சரண்யா பொன்வண்ணன், டெல்லி கணேஷ் மற்றும் ஜனகராஜ் உள்ளிட்ட பலரும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.