காதலரை கரம்பிடித்த எமி ஜாக்சன்.. சிம்பிளாக நடந்த திருமணம் - லவ்லி கிளிக்ஸ் இதோ!

Ansgar R |  
Published : Aug 25, 2024, 10:59 PM IST

Amy Jackson : பிரிட்டீஷ் நாட்டு தலைமையில் உள்ள தன்னாட்சி நகரமான Isle of Man என்ற நகரத்தில் பிறந்த நடிகை தான் எமி ஜாக்சன்.

PREV
14
காதலரை கரம்பிடித்த எமி ஜாக்சன்.. சிம்பிளாக நடந்த திருமணம் - லவ்லி கிளிக்ஸ் இதோ!
Amy Jackson

கடந்த 1992ம் ஆண்டு பிறந்த நடிகை எமி ஜாக்சனுக்கு வயது 32. கடந்த 2009ம் ஆண்டு, தனது 17 வது வயது முதல் மாடலிங் துறையில் இவர் பயணித்து வருகிறார். கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற "மிஸ் இங்கிலாந்து" போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்தார் எமி ஜாக்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

"பல்லு போன நடிகர்களால் இளைஞர்களுக்கு வாய்ப்பு குறையுது" - பதில் தாக்குதல் நடத்திய துரைமுருகன்!

24
Ed Westwick

மிஸ் இங்கிலாந்து போட்டியில் பங்கேற்ற அந்த ஆண்டே அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அவருடைய நடிப்பில் வெளியான முதல் திரைப்படம், கடந்த 2010ம் ஆண்டு ஏ.எல் விஜய் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் வெளியான "மதராசபட்டினம்" என்கின்ற தமிழ் திரைப்படம் தான். "துரையம்மா" என்கின்ற அந்த கதாபாத்திரத்தில் அவர் மிக நேர்த்தியாக நடித்திருந்தார்.

34
Actress Amy Jackson

தொடர்ச்சியாக தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வந்த எமி ஜாக்சன், கடந்த 2015ம் ஆண்டு ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பிற்காலத்தில் அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2021ம் ஆண்டு ஜார்ஜை பிரிந்த எமி ஜாக்சன், எட் வெஸ்ட்விக் என்பவரை கடந்த சில வருடங்களாகவே காதலித்து வந்தார்.

44
Amy Jackson weds ed westwick

தனது காதலர் வெஸ்ட்விக்குடன் பல ஆண்டுகள் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த நடிகை எமி ஜாக்சன், இந்த ஆண்டு துவக்கத்தில் அவரை திருமணம் செய்ய முடிவு செய்து, அவர்களுக்கு எளிமையாக நிச்சயதார்த்த விழாவும் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் தற்பொழுது இந்த ஜோடி எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கலைஞர் நூற்றாண்டு விழா.. நினைவு நாணயம் பெற்றுக்கொண்ட கமல் - ஸ்டாலினுக்கு புகழாரம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories