சூரிக்கு ஒர்க் அவுட் ஆன பார்முலா.. சதீஷுக்கு கைகொடுக்குமா? இன்னொரு ஆக்ஷன் ஹீரோ பராக்!

First Published | Aug 25, 2024, 5:46 PM IST

Sattam En Kaiyil : பிரபல நடிகர் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் தான் சட்டம் என் கையில், விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Sathish Movies

சேலத்தில் பிறந்து வளர்ந்த நடிகர் சதீஷ், இளமை காலத்திலேயே தனது குடும்பத்திற்காக சிறு சிறு வேலைகளை செய்து தனது வாழ்க்கையை நடத்தி வந்த ஒரு சிறுவன். கடந்த 2001ம் ஆண்டு, தனது 14வது வயதிலேயே இவர் பிரபல எழுத்தாளர் மற்றும் நடிகர் கிரேசி மோகனின் நாடகங்களில் இணைந்து நடிக்க ஆரம்பித்தார். சுமார் 8 ஆண்டுகள் கிரேசி மோகனோடு சதீஷ் பயணித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

"தப்பித்தது தலைவர் படம்" அக்டோபர் ரேஸில் இருந்து பின்வாங்கும் கங்குவா? லேட்டஸ்ட் அப்டேட்!
 

Conjuring Kannappan

இந்த சூழலில் தான் கடந்த 2006ம் ஆண்டு கிரேசி மோகன் எழுத்தில் வெளியான "ஜெர்ரி" என்கின்ற திரைப்படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு பிரபல நடிகர் சிவா நடிப்பில் வெளியான "தமிழ் படம்" தான் நடிகர் சதீஷுக்கு ஒரு மிகப்பெரிய பிரேக்கிங் பாய்ண்டாக அமைந்தது என்றால் அது மிகையல்ல.

Tap to resize

Actor Sathish

தொடர்ச்சியாக தமிழில் "மதராசபட்டினம்", "வாகை சூடவா" மற்றும் "தாண்டவம்" போன்ற திரைப்படங்களில் நடித்து டாப் நகைச்சுவை நடிகராக மாறினார் சதீஷ். தளபதி விஜய், தனுஷ் மற்றும்  சிவகார்த்திகேயன் என்று பல முன்னணி நடிகர்களோடு இணைந்து காமெடி நடிகராக கலக்கி வந்த சதீஷ், கடந்த 2023ம் ஆண்டு முதல் தமிழ் திரை உலகில் நாயகனாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Sattam En Kaiyil

ஏற்கனவே "கண்ணை நம்பாதே", "துடிக்கும் கரங்கள்", "வித்தைக்காரன்" மற்றும் "காஞ்சுரிங் கண்ணப்பா" உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகனாக நடித்த சதீஷ், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிக்க ஒப்பந்தமான திரைப்படம் தான் "சட்டம் என் கையில்". முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் ஹீரோவாக இப்படத்தில் அவர் களமிறங்கியுள்ளார். சுமார் 2 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு, இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 20ம் தேதி உலக அளவில் வெளியாகிறது.

தளபதியின் GOAT.. ஸ்பெஷல் பாடல் ஒன்றை வெளியிட தயாரான வெங்கட் - ஒரு Surprise இருக்கு!

Latest Videos

click me!