தளபதியின் GOAT.. ஸ்பெஷல் பாடல் ஒன்றை வெளியிட தயாரான வெங்கட் - ஒரு Surprise இருக்கு!

Ansgar R |  
Published : Aug 25, 2024, 04:27 PM IST

Thalapathy Vijay : தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 5ம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ளது.

PREV
14
தளபதியின் GOAT.. ஸ்பெஷல் பாடல் ஒன்றை வெளியிட தயாரான வெங்கட் - ஒரு Surprise இருக்கு!
Whistle Podu

லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, தனது அரசியல் கட்சி குறித்து அறிவித்த தளபதி விஜய் இப்போது தனது 68வது திரைப்பட பணிகளை மேற்கொண்டு வருகிறார். பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு யுவன் சங்கர் ராஜா இசையில், தளபதி விஜய்யின் குரலில் "விசில் போடு" என்கின்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வெங்கட் பிரபுவின் திரைப்படங்களின் பல குறியீடுகள் இந்த பாடலில் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

அனந்த் அம்பானி திருமணத்திற்கு ஏன் போகல? - கங்கனா ரனாவத் பளீச் பதில்!

24
Chinna Chinna Kangal

அதனைத் தொடர்ந்து யுவன் சங்கர் ராஜாவின் அக்காவும், மறைந்த தேசிய விருது வென்ற பாடகியுமான பாவதாரிணியின் குரலை, AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, "கோட்" திரைப்படத்தில் ஒரு பாடலை உருவாக்கினார் யுவன். "சின்ன சின்ன கண்கள் திறக்கிறதே" என்கிற அந்த பாடல் பவதாரணி குரலிலும், தளபதி விஜய் குரலிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

34
Spark 3rd Single

ஏற்கனவே வெளியான 2 பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மூன்றாவதாக வெளியான "ஸ்பார்க்" பாடல் கொஞ்சம் அடிவாங்கியது. குறிப்பாக அந்த பாடலில் பயன்படுத்தப்பட்ட டீ ஏஜிங் என்கின்ற அந்த தொழில்நுட்பம், சரியாக பயன்படுத்தப்படவில்லை என்கின்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இருப்பினும் இப்போது அந்த பிரச்சனைகளை சரி செய்து, பல விஷயங்களை படத்தில் மாற்றி இருப்பதாக வெங்கட் பிரபு அண்மையில் அறிவித்திருந்தார்.

44
Actress Trisha

இந்த நிலையில், கோட் படத்திலிருந்து நான்காவது பாடல் ஒன்று, சிறப்பு பாடலாக விரைவில் வெளியாக உள்ளதாக இப்போது தகவல்கள் தெரிவிக்கின்றது. ஒரு பேட்டியில் இயக்குனர் வெங்கட் பிரபு கூட இந்த பாடல் குறித்து உறுதிப்படுத்தி உள்ள நிலையில், நடிகை த்ரிஷா சிறப்பு தோற்றத்தில் இப்பாடலில் தளபதி விஜயோடு நடனமாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றது.

காதலனோடு சென்று சூப்பர்ஸ்டாருக்கு கல்யாண அழைப்பிதழ் கொடுத்த மேகா ஆகாஷ் - போட்டோஸ் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories