அனந்த் அம்பானி திருமணத்திற்கு ஏன் போகல? - கங்கனா ரனாவத் பளீச் பதில்!

First Published | Aug 25, 2024, 4:13 PM IST

அனந்த் அம்பானி தனது திருமணத்திற்கு நேரில் அழைத்தும் கங்கனா ரனாவத் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
 

Kangana Ranaut

முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட்க்கும் கடந்த ஜூலை 12, 2024 அன்று மும்பையில் நடைபெற்றது. இந்த திருமண விழா சுமார் 5 மாதங்கள் (மார்ச் மாதம் ஜாம்நகரில் நடந்த திருமணத்திற்கு முந்தைய விருந்து முதல் ஜூலை மாதம் திருமணம் வரை) நடந்தது. சல்மான் கான், ஷாருக்கான், ஆமிர் கான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பாலிவுட்டின் அனைத்து நட்சத்திரங்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இருப்பினும், நடிகை கங்கனா ரனாவத் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. தற்போது அனந்த்-ராதிகா திருமணம் முடிந்து ஒன்றரை மாதங்கள் கழித்து, திருமணத்தில் கலந்து கொள்ளாததற்கான காரணத்தை கங்கனா கூறியுள்ளார்.
 

Anant Ambani Radhika Merchant

அனந்த் அம்பானி திருமணத்திற்கு ஏன் கங்கனா ரனாவத் போகல?
 

அண்மையில், சித்தார்த் கண்ணனுக்கு அளித்த பேட்டியில், அனந்த் அம்பானி தனக்கு நேரில் போன் செய்து திருமணத்திற்கு அழைத்ததாகவும், ஆனால் தனது சகோதரரின் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் அவரது திருமணத்திற்கு செல்ல முடியவில்லை என்றும் கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

மேலும் அனந்த் அம்பானியிடமே தான் திருமணத்திற்கு வர இயலாது என போன் செய்து தெரிவித்து விட்டதாகவும் கங்கனா கூறியுள்ளார். “எனக்கு அனந்த் அம்பானி போன் செய்தார். அவர் மிகவும் நல்லவர். என்னை திருமணத்திற்கு வரும்படி அழைத்தார். அப்போது நான் என் வீட்டில் திருமணம் நடக்க இருப்பதாகவும், என் தம்பிக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறினேன். அது மிகவும் மங்களகரமான நாள்” என்று கங்கனா கூறினார்.

Tap to resize

Kangana Ranaut

கங்கனா ரனாவத் திரைப்பட நட்சத்திரங்களின் திருமணங்களில் கலந்து கொள்வதில்லையா?

நடிகையும், இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டியைச் சேர்ந்த பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத், திரைப்பட நட்சத்திரங்களின் திருமணங்களில் கலந்து கொள்வதை தான் தவிர்த்து வருவதாகவும் கூறியுள்ளார். “நான் பெரும்பாலும் திரைப்படத் துறையினரின் திருமணங்களில் கலந்து கொள்வதை தவிர்க்கிறேன்” என்று அவர் கூறினார்.

திருமணத்திற்கு நான் தயாராக இருக்கிறேன் - மனம் திறந்த கங்கனா!

Kangana Ranaut in Emergency

'எமர்ஜென்சி' படத்தில் பிஸியாக இருக்கும் கங்கனா ரனாவத்

தற்போது கங்கனா ரனாவத் தனது 'எமர்ஜென்சி' பட வேளைகளில் பிஸியாக உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பது மட்டுமின்றி, இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்த படத்தை அவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான மணிகர்னிகா பிலிம்ஸ் பேனரில் தயாரித்துள்ளார். 1970களில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசர நிலையை அமல்படுத்தியது தொடர்பான கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கங்கனா ரனாவத் இந்திரா காந்தி வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கங்கனா ரனாவத் உடன் அனுபம் கெர், ஸ்ரேயாஸ் தல்படே, மிலிந்த் சோமன், மகிமா சவுத்ரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் செப்டம்பர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
 

Latest Videos

click me!