'ஒரு சமூகத்தின் உயிர்வலி' மாரி செல்வராஜ் வீட்டுக்கே சென்று வாழ்த்திய எம்.பி திருமாவளவன்

First Published | Aug 25, 2024, 2:02 PM IST

சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் வாழை திரைப்படத்தை பார்த்துவிட்டு அப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜை அவரது வீட்டிற்கே சென்று வாழ்த்தினார்.

Vaazhai

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய மெகா ஹிட் படங்களை கொடுத்த மாரி செல்வராஜ் தற்போது புதிதாக வாழை படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். இப்படம் கடந்த 23ம் தேதி வெளியான நிலையில் படத்தை பார்க்கும் பிரபலங்கள் அனைவரும் இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர். 

Vaazhai

மேலும் இப்படத்தில் மாரி செல்வராஜ் தனது மனைவியை தயாரிப்பாளராகவும் அறிமுகப்படுத்தி உள்ளார். படத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Thirumavalavan

இந்நிலையில் பாடத்தை பார்த்த சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் இயக்குநர் மாரி செல்வராஜின் வீட்டிற்கே நேரில் சென்று பாராட்டினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டள்ள எக்ஸ் தள பதிவில், “நாடே கொண்டாடும் வாழை"! கண்ணீரில் கருக்கொண்ட காவியம். கலையுலகே புருவம் உயர்த்தும் கலைநயம். 

Mari Selvaraj

உழைக்கும் மக்களுக்கு வாழைக்குலைகள் மட்டுமல்ல வாழ்க்கையே பெருஞ்சுமை. புளியங்குளத்தில் முளைவிட்ட பொதுவுடைமை அரசியலின் தாக்கத்தால் மாரியின் வேர்களில் மார்க்சியம்.

Thirumavalavan with Mari Selvaraj

போதாது கூலியென போர்க்குரல் வெடித்தெழும் பொருளியல் முரண் விளக்கும் புரட்சிகரப் படைப்பு! வறுமையை எதிர்த்து வலிகளைச் சுமந்து வாழ்க்கையைத் தேடும் வரலாற்றுக் குறிப்பு! விபத்தில்தான் பலி என்றாலும், இது வெண்மணி வெங்கொடுமையின் வேறொரு வடிவம். 

Thirumavalavan with Mari Selvaraj

பச்சிளம் குழந்தை பருவத்திலும்  குடல் முறுக்கும் பசியடக்கி கொடுந்துயர தடைநொறுக்கி வெகுண்டெழுந்து போராடி வெற்றி இலக்கை எட்டித் தொட்ட  ஒரு பிறவிப்போராளியின் தன்வரலாறு. இது மாரியின் மழலைப்பருவ வரலாறு எனினும் ஒரு சமூகத்தின் உயிர்வலி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos

click me!