தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளராகவும் பல்வேறு படங்களை தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்பில் வெளிவந்த கனா, யாழ் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த வரிசையில் அவர் தயாரிப்பில் அண்மையில் ரிலீஸ் ஆன திரைப்படம் தான் கொட்டுக்காளி. இப்படத்தை கூழாங்கல் படத்தின் இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் சூரி நாயகனாக நடித்திருக்கிறார்.
24
Anna ben
விடுதலை, கருடன் படங்களின் வெற்றிக்கு பின்னர் சூரி ஹீரோவாக நடிக்கும் மூன்றாவது படம் இதுவாகும். இப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக அன்னா பென் என்கிற மலையாள நடிகை நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாது. கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக இதை எடுத்திருக்கிறார் வினோத் ராஜ். இப்படத்தின் ரிலீசுக்கு முன்னர் அதன் ப்ரிவ்யூ ஷோ தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுக்கு திரையிடப்பட்டது.
அதில் படம் பார்த்த பிரபலங்களில் மிஷ்கினும் ஒருவர். அவர் அந்தப் படத்தை ஆஹா... ஓஹோ என புகழ்ந்து தள்ளியதால் படம் வேறலெவலில் இருக்கும் என நம்பி திரைக்கு சென்றவர்கள் அதிகம். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இது விருதுக்காக எடுக்கப்பட்ட படம் என்பதால் இதில் கமர்ஷியல் அம்சங்கள் இல்லை. இப்படத்தில் மற்றொரு ஷாக் என்னவென்றால் இதில் கிளைமேக்ஸே கிடையாதாம். அதுவும் கடும் விமர்சனத்துக்குள்ளானது.
44
Vaazhai vs Kottukkaali Box Office
இப்படி விமர்சன ரீதியாக டல் அடித்த இப்படம் வசூலிலும் பயங்கர அடிவாங்கி உள்ளது. இப்படி ரிலீசான இரு தினங்களில் மொத்தமே ரூ.85 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை தான் வசூலித்து உள்ளதாம். மறுபுறம் இதற்கு போட்டியாக ரிலீஸ் ஆன மாரி செல்வராஜின் வாழை திரைப்படம் இரண்டு நாட்களில் ரூ.3.8 கோடி வசூலை வாரிக் குவித்து மாஸ் காட்டி வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் இன்றாவது கொட்டுக்காளி படம் பாக்ஸ் ஆபிஸில் பிக் அப் ஆகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.